மீன்கள் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், அபார ருசியை தரக்கூடிய குழம்பு மீன்களில் ஒன்று தான், சங்கரா மீன். ஆங்கிலத்தில் ரெட் ஸ்னாப்பர் என்பார்கள்.
இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, தாமிரம், செலினியம், தியாமின், நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம், ஃபோலேட், வைட்டமின் பி-12, வைட்டமின் A, E,போன்றவை இதில் அடங்கி உள்ளன.
இதிலுள்ள செலினியம், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க செய்வதுடன், தைராய்டு ஆரோக்கியத்தையும் பெருக்குகிறது. இதிலுள்ள வைட்டமின் பி12, நரம்பு செல்களுக்கும், ரத்த சிவப்பணுக்களை பராமரிக்கவும் உதவுகிறது.
இதிலுள்ள வைட்டமின் E, உடலின் தோல் பராமரிப்புக்கும், கண்களை பாதுகாக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் A, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சரி இனி சங்கரா மீன் பயன்படுத்தி ருசியான சங்கரா மீன் குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள்
சங்கரா மீன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2.
தக்காளி - 2 நடுத்தர அளவு, பொடியாக நறுக்கப்பட்டது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
பூண்டு - 8 பற்கள்
நசுக்கப்பட்ட
புளி - தேவையான அளவு
மிளகாய் - மல்லித் தூள்/ குழம்பு மிளகாய்த் தூள்
3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 தண்டு
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை :
வடகம் வெந்தயம் சீரகத்திற்குப் பதிலாக என்றால்
2 தேக்கரண்டி
ஒரு மண் பானையில் அல்லது கடாயில் எண்ணெய் சூடுபடுத்தி வெந்தயம், சீரகம் சேர்க்கவும்.
(வெந்தயம், சீரகத்திற்குப் பதிலாக வடகம் கூட சேர்க்கலாம்). பூண்டு பற்கள், பச்சை மிளகாய் களைத் தொடர்ந்து கறிவேப் பிலையைச் சேர்க்கவும். ஒரு சில விநாடிகள் வதக்கி நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும்.
(வெந்தயம், சீரகத்திற்குப் பதிலாக வடகம் கூட சேர்க்கலாம்). பூண்டு பற்கள், பச்சை மிளகாய் களைத் தொடர்ந்து கறிவேப் பிலையைச் சேர்க்கவும். ஒரு சில விநாடிகள் வதக்கி நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும்.
வெளுக்கும் வரை வறுத்து நறுக்கப்பட்டத் தக்காளியைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்கவும். பின் - மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
ஊற வைத்த புளியில் இருந்து புளிக் கரைசலைப் பிழித்து வெங்காய த்தோடு சேர்க்கவும் - தக்காளிச் சாறு.
கூடுதல் தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்க்கவும், தேவைப் பட்டால்.
மூடி 10 நிமிடங்களுககு மிதமானச் சூட்டில் வேக வைக்கவும்.
இப்போது மீனை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பானையை மூடவும்.
5-6 நிமிடங் களுக்கு சிறு தீயி்ல் அல்லது மீன் வேகும் வரை வேக வைத்து அடுப்பி லிருந்து இறக்கி வைக்கவும்.
கறிவேப்பிலை யால் அலங்கரித்து சூடான சாதத்தோடு பரிமாறவும்.