சூப்பரான காலிஃப்ளவர் பிரியாணி செய்வது எப்படி?





சூப்பரான காலிஃப்ளவர் பிரியாணி செய்வது எப்படி?

0
வெர்சடைல் உணவு என்று கூறப்படும் காய்கறிகளில், காலிஃபிளவருக்கு முதலிடத்தையே கொடுக்கலாம். காய்கறிகள் சாப்பிட பிடிக்காது என்று கூறுபவர்கள் கூட காலிஃபிளவரை விரும்பி சாப்பிடுவார்கள்.
சூப்பரான காலிஃப்ளவர் பிரியாணி செய்வது எப்படி?
காலிஃபிளவரை விதம் விதமாக, விரும்பும் சுவையில் சமைத்து சாப்பிடலாம். அது மட்டுமில்லாமல் காலிஃபிளவரை சேர்க்கும் உணவின் சுவை அதிகரித்து விடும். 

கோபி 65, கோபி மன்சூரியன் விரும்பாதவர்கள் மிகவும் குறைவு.  ஏற்கனவே கூறியுள்ளது போல காலிஃபிளவர் என்பது க்ருசிஃபெராஸ் காய்கறிகள் வகையைச் சேர்ந்தது. 

இவற்றில் ரஃபினோஸ் என்ற மிக மிக கடினமான ஒரு குளுக்கோஸ் இருக்கிறது. பெரும் குடலால் இந்த குளுக்கோசை அவ்வளவு எளிதாக செரிமானம் செய்ய முடியாது. 
எனவே வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இதை ஃபெர்மன்ட் செய்து, பிறகு செரிமானம் ஆகும். 

எனவே நீங்கள் காலிஃபிளவர் அதிகமாக சாப்பிடும் பொழுது இந்த ஃபெர்மெண்டேஷன் ஆகும் சமயத்தில் வயிறு உப்பசம் மற்றும் வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான கோளாறு ஏற்படும்.

அடிக்கடி அலர்ஜி ஏற்படும் நபர்கள் அல்லது நீடித்த அலர்ஜி தொந்தரவு இருப்பவர்கள் காலிஃபிளவரை தவிர்த்து விட வேண்டும். 
ஒரு சிலருக்கு இதை சாப்பிட்டால் உடனடியாக சருமத்தில் அலர்ஜி, வீக்கம், அல்லது மூச்சு திணறல் ஆகியவை ஏற்படலாம். 

ஒரு முறை காலிஃபிளவர் சாப்பிட்டு உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டால், நீங்கள் காலிஃபிளவரை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும்.

தேவையானவை: 

பாசுமதி அரிசி - ஒரு கப், 

நறுக்கிய காலி ஃப்ளவர் - ஒரு கப், 

கார்ன் ஃப்ளார் - கால் கப், 

அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், 

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், 

நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், 

கீறிய பச்சை மிளகாய் - 2, 

தனியாத் தூள் - அரை டீஸ்பூன், 

மாங்காய் துருவல் - கால் கப், 

பட்டை - ஒரு துண்டு, 

ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, 

நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 
காலிஃப்ளவர் பிரியாணி - Cauliflower Biryani
கொதிக்கும் நீரில் நறுக்கிய காலி ஃப்ளவரை போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்கவும். அதனுடன் கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் விட்டு, மசாலா கலந்த காலி ஃப்ளவரைப் பொரித் தெடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து.. பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, தனியாத் தூள் சேர்த்து மாங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். 

ஊற வைத்து, நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)