உலகளவில் அசைவ விரும்பிகள் பலரால் முதன்மையாக விரும்பப்படும் உணவு சிக்கன். பல வகையான அசைவ உணவுகள் இருப்பீனும் சிக்கன் சுவை அலாதியானது.
அதே சமயத்தில் சிக்கன் சாப்பிடுவதால் பல உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுவதுண்டு. அப்படி குறிப்பிடும் போது சிக்கன் மூலம் கிடைக்கும் நன்மைகள் காணாமல் போய் விடுகிறது.
சிக்கனில் அதிகப்படியான புரதம் நிறைந்துள்ளது. இதனால் எலும்புகளை பாதிக்கக்கூடிய ஆஸ்டியோ போரோசிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
மேலும் இது எலும்புகளை ஆரோக்கியம் பெறச் செய்கிறது. கோழி இறைச்சி அதிக புரதச்சத்து கொண்ட மெலிந்த இறைச்சியாக இருந்தாலும், கொலஸ்ட்ரால் அதிகமாகவும் உள்ளது.
சிக்கன் செலினியத்தை வழங்குகிறது, இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்தவும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சிக்கன் சாப்பிடுவதால், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிக்கனில் உள்ள சேர்மங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளின் தேக்கத்தை குறைப்பதால், புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.வீட்டிலேயே செஸ்வான் சிக்கன் நூடுல்ஸை எளிய முறையில் செய்யலாம். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் – 1 கப்
பூண்டு – 5
எலும்பில்லாத சிக்கன் – 150 கிராம்
வெங்காயம் – 2
கேரட் – 1
குடை மிளகாய் – 2
அஜினோ மோட்டோ – சிறிது
முட்டை – 2
மிளகு தூள் – 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
வர மிளகாய் விழுது அல்லது சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
சர்க்கரை – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், வெங்காயத் தாள், கேரட், குடை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும்.
நூடுல்ஸை வேக வைத்து வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு சிறிது எண்ணெய் போட்டு பிரட்டி வைக்கவும். இவ்வாறு செய்தால் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பொடி செய்த பூண்டை போட்டு வதக்கவும்.
அடுத்து சிக்கனை சேர்த்து மிதமான தனலில் வைத்து, சிக்கன் வேகும் வரை வதக்கவும்.
பின்னர் வெங்காயம், கேரட், குடை மிளகாய் சேர்த்து, சிறிது அஜினோ மோட்டோ தூவி வதக்கவும்.
அனைத்தும் வதங்கியதும், காயை ஒதுக்கி நடுவில் குழி செய்து, 1 ஸ்பூன் ஆயில் விட்டு அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்த 2 முட்டையை ஊற்றி பொரிக்கவும்.
முட்டை வறுபட்டதும் வரமிளகாய் விழுது, தக்காளி சாஸ், சோயா சாஸ், சிறிது சர்க்கரை, சேர்த்து பிரட்டி நூடுல்ஸ், வெங்காயத் தாள் சேர்த்து மசாலா நுடுல்ஸில் நன்றாக பரவும் படி பிரட்டி சூடாக பறிமாறவும்.
செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ் ரெடி.