கொண்டைக்கடலையில் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முடி, நகம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் சத்து மிக முக்கியம்.
எனவே தினமும் 100 கிராம் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வரவது நல்லது. கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. உடல் எடையினை குறைக்க நார்சத்து முக்கியம்.
தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது.
இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். கொண்டைக் கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது.
உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் உங்கள் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது.
எனவே உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் தினமும் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வந்தால் நிறைய பயன் பெறலாம்.
கொண்டைக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியம் மேம்படும்.
தேவையானவை
கொண்டைக் கடலை – 200 கிராம்,
நறுக்கிய வெங்காயம்,
தக்காளி – தலா 2,
சாட் மசாலாத் தூள் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
தேங்காய்ப் பால் – முக்கால் கப்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு
அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் !
செய்முறை :
முதலில் கொண்டைக் கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத் தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக் கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு
உங்கள்களை சுவைக்க தூண்டும் எண்ணெற்ற சுண்டல் வகைகள். நீங்கள் விழா காலங்களில் உங்களுக்கு தேவையான சுண்டல் வகைகளை சமைத்து சாப்பிடலாம்.
எப்போதும் உணவு பொருட்கள் தூய்மை யாக இருப்பது நன்று.உப்பு மற்றும் எண்ணெய் அளவாக இருத்தால் சுவையாக இருக்கவும்.