சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா செய்வது எப்படி?





சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா செய்வது எப்படி?

0
உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. 
சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.
முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளதால், இது நமது கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

வேக வைத்த முட்டை - 2

பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்

கிராம்பு, பூண்டு - 2

உப்பு - சுவைக்கேற்ப

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

புளிக்கரைசல் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1

எண்ணெய் - தேவையான அளவு

கொத்த மல்லி - சிறிதளவு
செய்முறை :

கொத்த மல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். 
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காய த்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த் தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் இட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.
அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு இட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்த மல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.

சில்லி முட்டை மசாலா ரெடி! சில்லி முட்டை மசாலாவை சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் அல்லது ரொட்டி, பராத்தா உடன் சேர்த்து சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)