கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் செய்வது எப்படி?





கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் செய்வது எப்படி?

0
குக்கீ மற்றும் பிஸ்கட் ஆகிய இரு பெயர்களும் வேறுபட்ட அர்த்தங்களைக் கொண்டிருப்பினும் பல நாடுகளிலும் இரண்டு பெயர்களுமே பயன்படுத்தப் படுகின்றன. 
கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ்
ஸ்காட்லாந்தில் குக்கீ என்றால் வெறும் பன்னைக் குறிக்கும், அமெரிக்காவில் பிஸ்கட் என்றால் ஸ்கோன் போன்ற விரைவு பிரட்டைக் குறிக்கும். 

குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். இதை மொறு மொறுப்பாகவும் மிகவும் மென்மையாகவும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அதை விருன்பி சாப்பிடுவார்கள்.

பிஸ்கேட், குக்கீஸ் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் வெளியில் கடைகளில் சென்று தான் வாங்கி சுவைத்து இருப்போம். குக்கீஸ் போன்றவற்றை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அந்த வகையில் இன்று நாம் சூப்பரான கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸை வீட்டில் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து தெரிந்து கொள்ளலாம். 

குக்கீயின் மென்மைத் தன்மையானது அது எவ்வளவு நேரத்துக்கு பேக் செய்யப் படுகிறது என்பதைச் சார்ந்தது.

தேவையானவை: 
ப்ளைன் கார்ன் ஃப்ளேக்ஸ் – ஒரு கப் (குவியலாக), 

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், 

தேன் – 2 டேபிள் ஸ்பூன், 

விரும்பிய நட்ஸ் மற்றும் உலர்ந்த செர்ரி, திராட்சை – 1/4 கப்.

செய்முறை:
கார்ன்ஃப்ளேக்ஸ் குக்கீஸ்
கார்ன் ஃப்ளேக்ஸை கையால் ஒன்றிரண்டாக உடைக்கவும். நட்ஸையும், உலர்ந்த பழங்களையும் பொடியாக நறுக்கவும். 

கப் கேக் பேக்கிங் தட்டில் சின்ன சின்ன கப் கேக் தாள்கள் பத்து அடுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் உருகியதும் தேனைச் சேர்த்து ஒன்று சேர மிதமான தீயில் கிளறவும். 

வெண்மையாக நுரைத்து வந்ததும் கார்ன் ஃப்ளேக்ஸை சேர்த்து, நிறம் மாறாமல் வாசம் வரும் வரை கிளறி இறக்கி, 

நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து நன்கு புரட்டி, உடன் தயார் செய்து வைத்திருக்கும் பேப்பர் கப்களில் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து வைக்கவும். 
அவனை 180 டிகிரி ப்ரீஹீட் செய்து, அதில் கப்களை வைத்து 10 நிமிடம் வைத்து பேக்செய்து எடுக்கவும். 

ஆறியதும் மொறு மொறுப்பாக இருக்கும். காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து ஒரு வாரம் வரை வைத்துச் சாப்பிடலாம். 

குறிப்பு: 

ரைஸ் ஃப்ளேக்ஸிலும் இதே போல செய்யலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)