ஃப்ரூட் பிரியாணி செய்முறை / Fruit Biryani Recipe !





ஃப்ரூட் பிரியாணி செய்முறை / Fruit Biryani Recipe !

0
ஆரம்ப காலத்தில், பிரியாணி என்பது இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு செய்து உற்றார் உறவினர்களின் வீடுகளுக்கு கொடுத்து மகிழ்வார்கள். 
ஃப்ரூட் பிரியாணி செய்முறை
அதிகமாக இஸ்லாமிய சகோதர்கள் வீடுகளில் அதிகாமாக பிரியாணி செய்யும் வழக்கம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால், முக்குக்கு முக்கு பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப் படுவதுண்டு. 
மொத்தத்தில் பிரியாணி இன்றைய இந்தியாவின் தேசிய உணவாக மாறிவிட்டது. தற்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை விதவிதமான பிராணி வகைகள், நல்ல பொறப்பு தான் ருசித்து சாப்பிட கிடைத்துள்ளது. 

ஆரம்பத்தில், பாரசீகத்தில் காட்டில் வேட்டையாடும் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டது தான் பிரியாணியாக உருவானது. 

முதலில் வெறும் மசாலாக்களை மட்டுமே பயன்படுத்திய பாரசீகர்கள், நாளடைவில் நறுமணத்திற்காக பல வாசனைப் பொருட்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். 
தற்போது இறைச்சியை ஒன்றாக சமைத்து சாப்பிடுவதே பிரியாணி என்ற நிலை மாறி, காய்கறி, முட்டை, இறால் என் பல பொருட்களை வைத்து பிரியாணி செய்யப்படுகிறது. 
தேவையானவை: 

திராட்சை, பலாப்பழம், பப்பாளி (மூன்றும் சேர்ந்து) - ஒரு கப்,

பாசுமதி அரிசி - ஒரு கப்,

தேங்காய்ப் பால் - ஒரு கப்,

முந்திரித் துண்டுகள் - ஒரு டீஸ்பூன்,

ஏலக்காய், கிராம்பு - தலா 1,

வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,

நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு கிராம்பு, ஏலக்காய் தாளித்து, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேங்காய்ப் பால், உப்பு, வெள்ளை மிளகுத் தூளை சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்?

ஆவி போனதும் திறந்து... சாதம் சூடாக இருக்கும் போதே பழக் கலவையை சேர்த்துக் கலந்து, வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)