இறால் மீன்களில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியுமா? அபார ருசியுடைய இந்த இறால் மீன்களை எப்படியெல்லாம் சமைக்கலாம் தெரியுமா? இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை..
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.
இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.
தேவையான பொருட்கள் :
இறால் – 250 கிராம்
அரிசி – 1 கப்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கிராம்பு – 4
இலவங்கப் பட்டை – 3
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
இஞ்சி, பூண்டு விழுது, – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கு
கொத்த மல்லி – சிறிதளவு
பார்க்கின்சன் நோயை வெல்ல என்ன செய்வது?
செய்முறை :
வெங்காயம், கொத்த மல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, இலவங்கப் பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிற மாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கி யதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், தேங்காய்ப் பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கடாயை மூடி புலாவை வேக வைக்கவும்.
மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மசாலா கலந்த இறாலை இட்டு நன்கு கிளறி விட்டு இறால் ஒரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
நிலவேம்புக் குடிநீர் எப்போது குடிக்க வேண்டும்?
புலாவ் வெந்ததும் அதன் மேலாக கொத்த மல்லி இலையை தூவி விட்டு வறுத்த இறாலை வைத்து அழகுப் படுத்தி பரிமாறலாம்.
கோவாவின் பிரபலமான இறால புலாவ் ரெடி!