சுவையான நெல்லிக்காய் டீ செய்வது எப்படி?





சுவையான நெல்லிக்காய் டீ செய்வது எப்படி?

0
நெல்லிக்காய் நமது உடலுக்கு சத்துக்களை தரக்கூடிய ஒரு காயாகும். இந்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அது உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும்.
இது எல்லா காலநிலையிலும் இலகுவாக கிடைக்கக் கூடியது. இதை சாப்பிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம். 

ஆயுர்வேத இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். இந்த காயில் வைட்டமின் சி அதிகம் நிறைந்து காணப்படுகின்றது. 

மேலும் நெல்லிக்காய் மனதையும்  உடலையும் அமைதிப்படுத்தும். இவ்வாறு பல குணநலங்கள் கொண்ட நெல்லிக்காயை எல்லோரும் விரும்பி உண்பது குறைவு.

நெல்லிக்காய் டீ சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பானம். இந்த காயில் டீ செய்து குடித்தால் அது உடலில் உள்ள பல பிரச்சனைகளை இல்லாமல் செய்யும். அவர்களுக்காக நெல்லிக்காயில் சுவையான டீ எப்படி போடுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானவை 

நெல்லிக்காய் - விதை நீக்கியது  

மிளகுப் பொடி 

மஞ்சள் தூள்

வெல்லம் 

எலுமிச்சைச் சாறு

செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து தண்ணீர் நன்றாக கொதித்ததும்  நெல்லிக்காயை விதை நீக்கி, நன்கு தட்டிக் கொள்ள வேண்டும். மிளகைப் பொடிக்கவும். 

இரண்டு டம்ளர் நீரில் இவற்றுடன் மஞ்சளைச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். பின்னர் மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். 

ஒரு டம்ளராக வற்றியதும், எலுமிச்சைச் சாறு சேர்த்து, விருப்பப் பட்டால் தேன் சேர்த்துப் பருகவும்.பின்னர் இதில் கொஞ்சமாக வெல்லம் சேர்த்து பருகலாம்.

வெல்லத்திற்கு பதிலாக நீங்கள் தேனும் சேர்த்துப்பருகலாம்.

நெல்லிக்காய் டீயின் சில நன்மைகள்:
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

* செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

* சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

* முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.

* இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

* கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

* கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

* நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

* வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

* புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)