கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.
உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
வெள்ளைப் போக்கைக் கட்டுப் படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக்கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.
குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.
தேவையானவை:
கொள்ளு - ஒரு டேபிள் ஸ்பூன்,
பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்,
வேர்க் கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன்,
எள்ளு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய் பால் அல்லது பால் - தேவையான அளவு,
நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
ட்ரைகிளிசரைட் குறைய எந்த வகையான உணவு நல்லது? #triglycerides
செய்முறை:
கொள்ளை வாசனை வரும் வரை வறுத்து, அதனுடன் பாசிப் பருப்பையும் சேர்த்து மேலும் வறுக்கவும். பிறகு இதனுடன் பொட்டுக் கடலையை யும், வேர்க் கடலையை யும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
இதில் எள்ளு, சீரகம், உப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசிறவும்.
பிறகு தேங்காய் பாலையோ, பாலையோ சேர்த்து, போண்டா போடும் பக்குவத்தில் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மாவை போண்டாக் களாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.