நண்டுவில் வைட்டமின் A, B12, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரோட்டின், செலினீயம், காப்பர், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.. கொழுப்புக்களும் குறைவு.. கலோரிகளும் குறைவு.
புரோட்டீன்கள் அதிகம் உள்ளதால் தான், நண்டு உடலுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளன. அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது. தசைகளின் சீரமைப்புக்கு இந்த நண்டுகள் உதவுகின்றன.
குறைவான கொழுப்பு உள்ளதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களிலிருந்து காத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால், இதய நோயாளிகளுக்கு நண்டு மிகச்சிறந்த உணவாக விளங்குகிறது.
நண்டு சாப்பிடுவது மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.. மூளை சிறப்பாக செயல்படவும், நரம்பு மண்டலம் செயல்பாடுகளுக்கும் இந்த நண்டு உதவி செய்கிறது.
குறைபான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்கக் கூடியவர்களுக்கு நண்டு பெஸ்ட் சாய்ஸ்ஸாக உள்ளது. இதிலுள்ள வைட்டமின் A கண்பார்வைக்கு உதவுகிறது.
கரிமக்கூறுகளான ரெட்டினொல், ரெட்டினால், ரெட்டினியோக் அமிலம், பீட்டா கரோட்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பிரதான இடத்தை பிடிக்கின்றன.
கண் புரை மற்றும் கருவிழி சிதைவு போன்றவற்றை தடுப்பதிலும் பல நன்மைகளை தருகின்றன. நண்டு உணவில் உள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது. நன்மைகள் இருந்தாலும், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் நண்டு உண்ணக் கூடாது.
தேவையான பொருட்கள் :
நண்டு - அரை கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - அரை முடி
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு
கடுகு - தேவையான அளவு,
பட்டை, சோம்பு - தேவையான அளவு,
கசகசா - தேவையான அளவு,
மிளகு தூள் - தேவையான அளவு
கொசு விரட்டிகள்: எது பெஸ்ட்?
செய்முறை :
நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காய த்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியம் தக்காளி, பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
தேங்காய், சோம்பு, கசகசா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளுவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காய த்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியம் தக்காளி, பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
தேங்காய், சோம்பு, கசகசா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளுவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கடுகு சேர்த்துத் தாளித்த பின்னர் அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகிய வற்றைப் போட்டு தாளித்த பின்னர் நண்டை அதில் கொட்டிக் கிளறுங்கள்.
சோப்பு ஒரு சிறப்பு பார்வை !
ஐந்து நிமிடம் கழித்து அரைத்து வைத்த வெங்காய தக்காளி விழுதைச் சேர்த்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.
பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடுங்கள்.
குழம்பு நன்றாகக் கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய கொள்ளவும். பின்னர் கொத்த மல்லித் தழை சேர்த்து இறக்குங்கள்.
நண்டு குருமா ரெடி.
குறிப்பு
தேவை யென்றால் தேங்காய் பாலும் சேர்க்கலாம்.
குறிப்பு
தேவை யென்றால் தேங்காய் பாலும் சேர்க்கலாம்.