ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது. உடல் சூட்டை தணிக்கக் கூடியது. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது.
மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம்.
இதில், ஆட்டின் நுரையீரல், கொழுப்புகளை நாம் சமைத்து சாப்பிடும் போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை தருகிறது.
ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. அந்த வகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும். இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்.
இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.
இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்க வேண்டுமென்று, இந்த ஆட்டுத் தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.
தேவையானவை :
மட்டன் எலும்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
பட்டை – 1
மல்லி பொடி – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்
வெங்காயம் – 1/2 கப்
கத்தரிக்காய் – 2
கிராம்பு – 1 – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கடலை பருப்பு – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
கொத்த மல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 1 – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
மொறு மொறு உப்பு சீடை செய்வது எப்படி?
செய்முறை :
முதலில் துவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலையை (4 விசில்) வேக வைக்கவும்.பிறகு எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்க வேண்டும்.
முதலில் துவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலையை (4 விசில்) வேக வைக்கவும்.
கூந்தலுக்கு டார்க் பிரவுன் ஹென்னா செய்வது எப்படி?
பிறகு எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்க வேண்டும்.