டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?





டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?

0
வாழைப்பழம் உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.
டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?
நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. 
பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும்  இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. 

உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச் சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. 

சரி, இனி வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை
மைதா மாவு -- 200 கிராம்

சர்க்கரை பொடி -- 100 கிராம்

வெண்ணைய் -- 100 கிராம்

கார்ன் ப்ளேக்ஸ் -- 50 கிராம்

முந்திரி பருப்பு -- 25 கிராம்

பேக்கிங் பவுடர் -- 1/2 ஸ்பூன்

உப்பு -- 1 சிட்டிகை

பூவன் வாழைப்பழம் -- 1 என்னம்

முட்டை -- 1 என்னம்

வாழைப்பழ எசன்ஸ் -- சில துளிகள்
செய்முறை :
டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?
முதலில் முந்திரியை பொடி யாக்கவும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா மாவு, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும். 

வெண்ணை யுடன் சர்க்கரையை பொடியை கலந்து நன்கு அடித்து முட்டை, எசன்ஸ் சேர்த்து கலக்கி 
இக்கலவையில் கார்ன் ப்ளேக்ஸ், முந்திரி பவுடர் சேர்த்து மைதா மாவு, வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும். கலவை ஸ்பூனில் எடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும். 

நெய் தடவிய ட்ரேயில் கலக்கிய மாவை ஸ்பூனால் எடுத்து சின்ன சின்ன தாக பரவலாக வைக்கவும். ஓவனில் 300 டிகிரி பாரன் ஹீட்டில் 20 நிமிடம் வைத்து பரிமாறவும்.

குறிப்பு :
உடல் எடை குறையுமா அல்லது அதிகரிக்குமா.? உண்மையை சொல்வதென்றால், வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் உடல் எடை அதிகரிக்கவும் செய்யும், அதேசமயம் எடையை குறைக்கவும் முடியும். 

இரண்டும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுகிறதா. ஆம் வாழைப்பழத்தை நீங்கள் எப்போது எடுத்துக் கொள்கிறீர்கள், எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து இதன் பலன் மாறுபடும். 

வாழைப்பழத்தை மிதமான அளவில் எடுத்துக் கொண்டு, அதனுடன் புரதம் மற்றும் நார்ச்சத்து உணவுகளையும் எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இன்றி இதன் சுவையை நாம் அனுபவிக்கலாம் மற்றும் ஊட்டச் சத்துக்களையும் பெறலாம். 

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன.? சராசரியாக 118 கிராம் அளவு கொண்ட நடுத்தர அளவிலான வாழைப்பழம் ஒன்றில், 15 கலோரிகள் மற்றும் 27 கிராம் மாவுச்சத்து ஆகியவை இருக்கும். 

இது தவிர நார்ச்சத்து மூன்று கிராம், புரதம் ஒரு கிராம் என்ற அளவில் இருக்கும். கொழுப்பு சத்து இதில் கிடையாது. 

அதே சமயம் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)