இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள்.
நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு. நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?
நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம். ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அந்த வகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான். ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது.
அதுமட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது.
அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிக்கன், மட்டன், மீன் எனப் பல வகைகளை ருசியாக செய்து சாப்பிடுவோம்.
இதில் செட்டிநாடு ஸ்பெஷல் என்றால் சொல்லவே வேண்டாம். சுவை அள்ளும். சிக்கனை எப்படி செய்து கொடுத்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதிலும் தற்போதைய காலத்தில் சிக்கனை கொண்டு விதவிதமாக புதிய உணவுகளை செய்து அசத்தி வருகிறார்கள். ஆனால் சிக்கனை கொண்டு செய்யப்படும் பல பாரம்பரிய உணவு வகைகளும் உள்ளன.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபியானது சிக்கன் பிரைட் ரைஸ் ஆகும்.
மிளகாய் தூள் சேர்க்காமல் மிளகாய் பேஸ்ட் மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து பாரம்பரியமான முறையில் எவ்வாறு காரசாரமான சிக்கன் பிரைட் ரைஸ் செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் – 1/2 கிலோ
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
வெங்காயத் தாள் – 4 பொடியாக நறுக்கியது
மிளகாய் பேஸ்ட் – 2 ஸ்பூன்
கறி மசாலா – 1 ஸ்பூன்
தக்காளி விழுது – 1 ஸ்பூன்
சீரக தூள், சர்க்கரை – 1/2 ஸ்பூன்
அஜினோ மோட்டோ – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – தேவையான அளவு
செய்முறை:
பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும்.
சிக்கனை சிக்கன் 65 செய்வது போல் செய்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
மிளகாய் விழுது தயார் செய்ய அவற்றை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து சிறிது வினிகர் சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
விஞ்ஞான முறையில் விஷங்களாகும் பழங்கள்
பின்னர் உப்பு, சர்க்கரை, அஜினோ மோட்டோ, எலுமிச்சை சாறு சேர்க்கவும். மேலும் சிக்கன் பொடியாக நறுக்கியதை சேர்க்கவும்.
கடைசியாக சாதம், மிளகுத் தூள், தக்காளி சாஸ், சீரகத் தூள், கறி மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக கொத்தமல்லி, வெங்காயத் தாளை தூவி இறக்கவும்.