சுவையான நண்டு ரிச் குருமா செய்வது எப்படி? #Kuruma





சுவையான நண்டு ரிச் குருமா செய்வது எப்படி? #Kuruma

0
நண்டுகளை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது. 
சுவையான நண்டு ரிச் குருமா செய்வது எப்படி?
நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன. செலீனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. 
இதன் மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும் தூண்டுகோலாகிறது. கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது. முடக்குவாதத்தையும் இந்த நண்டுகள் தடுக்கின்றன. 

ரத்த சுத்திகரிப்புக்கு பேருதவி புரிகிறது. நண்டில் குரோமியம் நிறைய உள்ளதால், ரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீராக பராமரிக்கவும் இந்த கடல்வாழ் உயிரினம் உதவுகிறது. 

காயங்களை ஆற்றும் தன்மை நண்டுகளுக்கு உண்டு. எனினும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவு நண்டினை சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் டாக்டர்களின் அட்வைஸ் இல்லாம்ல நண்டு சாப்பிடக்கூடாது. 
தேவையானவை

மஞ்சள் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 2 தேக்கரண்டி

சீரக தூள் - 1 தேக்கரண்டி

பூண்டு - 4

தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி

முந்திரி - 5

மல்லித் தழை - சிறிதளவு

தேங்காய் பால் - மூன்று டம்ளர்

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மிலி

இஞ்சி, பூண்டு அரவை - 1/2 தேக்கரண்டி

நண்டு - ஒரு கிலோ

தக்காளி - ஒன்று
தவணை முறையில் மனை வாங்குவது சரியா?
செய்முறை :
நண்டு ரிச் குருமா
முதலில் நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலவை கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.அதில் பச்சை மிளகாய் கீறியும், மல்லி தழையை பொடியாக நறுக்கியும் போடவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும், இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

வதங்கி யதும் மிளகாய் தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி விடவும். அதன் பிறகு கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பிக்கும் போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து இருபது நிமிடம் கொதிக்க விடவும். 

பிரண்டார் போல் எண்ணெய் விட்டுக் கொண்டு இருக்கும். அப்போது அடுப்பி லிருந்து இறக்கவும். சுவையான நண்டு ரிச் மசாலா தயார்.பரிமாறவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)