நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவைத் தவிர்த்து, கோதுமை, மக்காச்சோளம், சிவப்பு அரிசி போன்ற முழுதானிய மாவில் இருந்தும் பாஸ்தா தயாரிக்கப் படுகிறது.
எந்த மாவில் இருந்து பாஸ்தா தயாரிக்கப் படுகிறதோ, அதைப் பொறுத்து சத்துக்கள் மாறுபடும். முழு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்தாவாக இருந்தால்,
அதில் வைட்டமின்கள், மக்னீஷியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஷ் உள்ளிட்ட தாது உப்புக்கள், நார்ச் சத்து போன்றவை இயற்கையாகவே இருக்கும்.
கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தாவில் அதிக அளவில் நியாசின், தயாமினும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அடங்கி உள்ளது.
இதைச் சாப்பிடும்போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். சரி இனி பாஸ்தா கொண்டு சுவையான க்ரீமி பாஸ்தா செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
பாஸ்தா - 1 கப் ( எதாவது ஒரு வகை)
பட்டர் - 1 தேக்கரண்டி
மைதா மாவு - 1 தேக்கரண்டி
பால் - 1 கப் + 2 தேக்கரண்டி
பார்மாஜன் சீஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது பாஸ்தாவை உப்புடன் சேர்த்து 8 - 10 நிமிடம் வரை வேக விடவும்.
பின்பு பாஸ்தா வேகும் வரை ஒரு கடாயில் பாலினை ஊற்றி நன்றாக காய்ச்சவும். பின் மைதா மாவினை சிறிது பால் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
இப்பொழுது மைதா மாவு கரைசலை, பட்டருடன் சேர்த்து பாலில் ஊற்றி 5 நிமிடம் மைதா வாசம் போகும் வரை வேக விடவும்.பாஸ்தா வெந்த பிறகு அதனை வடிகட்டவும்.
பின்னர் பாஸ்தாவை பாலில் ஊற்றி கிளறி விடவும். இப்பொழுது மிகவும் எளிதில் செய்ய கூடிய கிரீமி பாஸ்தா ரெடி. இதனை பரிமாறும் பொழுது பார்மஜான் சீஸை பாஸ்தா மேல் தூவும்.பரிமாறவும்