மீன்களை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு, கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயங்கள் குறைகின்றன. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது.
மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.
இந்த கொழுப்பு அமிலங்கள் தான், இருதயம், மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. ஒமேகா-3 அமிலத்தை அதிகமாக உட்கொள்ளும் போது, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம்.
அது மட்டுமல்ல, கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது. தினமும் மீன் சாப்பிடுவதனால் ரத்தக்குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப் படுகிறதாம்.
வைட்டமின் D சத்துக்களும் நிறைவாக கிடைக்கிறது. எலும்புகளும், பற்களும் வலுவாக வைத்து கொள்ள முடியும்.. கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன், கெட்ட கொழுப்புக்கள் உடலில் சேர்வதையும் இந்த மீன்கள் தடுக்கின்றன..
தேவையான பொருட்கள் :
(வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)
வாழை மீன் – 3
பொட்டுக் கடலை – 2 டீஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 20 (நீளமாக நறுக்கவும்)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
நாட்டுத் தக்காளி – 4 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
புளிப்பு மாங்காய் – 1
கொத்த மல்லி – ஒரு கையளவு
நரம்பு முடிச்சு நோய் வர காரணம் ?
செய்முறை :
வாழைமீனை (கழுவி) துண்டு, துண்டாக நறுக்கவும்.
தேங்காய் சோம்பு, பொட்டு கடலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
மாங்காயை பெரிய துண்டுக ளாக வெட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் விட்டு சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தேனீ கடித்து மருத்துவ சிகிச்சையில் பியர் கிரில்ஸ் !
அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு மீன், மாங்காய் போட்டு நன்றாக கொதி வந்து மீன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான மீன் குருமா ரெடி.