சுவையான மாம்பழ அவல் கேசரி செய்வது எப்படி? #Kesari





சுவையான மாம்பழ அவல் கேசரி செய்வது எப்படி? #Kesari

0
மாம்பழம் நம் நாட்டின் தேசிய கனி, முக்கனிகளில் முதன்மையான ராஜா கனி மற்றும் எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். பெரும்பாலும் கோடைகாலம் வந்தாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது மாம்பழம் தான்.
மாம்பழ அவல் கேசரி
அதிக சாறும், நாறும் கொண்ட பழங்களில் இருந்து பல வகையான ஊறுகாய், பழ ஜாம் ஆகியவை தயாரிக்கப் படுகிறது. 

காய், பழம் என அனைத்தும் உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்துபவை என்றாலும், உள்ளே இருக்கும் மாங்கொட்டையில் இருக்கும் சிறு பருப்பு மட்டுமே குளிர்ச்சியை தரும் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். 

மாங்கொட்டையில் கால்சியம், மற்றும் கொழுப்பு சத்தும் இருக்கிறது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான அமைப்புக்கும் மிகவும் நல்லது. 

தோல் மற்றும் கண்களுக்கும் மாம்பழம் நல்லது. இதில் வைட்டமின் ஏ, நார்சத்து, கார்போஹைரேட், சர்க்கரைசத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. விசேஷமாக பழத்தின் தோல்பகுதியில் வைட்டமின் சி சத்துள்ளது. 

நாம் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை பழத்தின் இனிப்பு சுவை இருப்பதற்கு முக்கிய காரணமாய் இருக்கிறது. 
இப்பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது. 

மாம்பழம் மற்றும் தயிர் எந்த சூழ்நிலையிலும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. இந்த இரண்டின் கலவையும் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படும்.
தேவையானவை: 

கெட்டி அவல் - ஒரு கப், 

பெங்களூர் மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், 

சர்க்கரை - ஒரு கப், 

கேசரி கலர் - சிறிதளவு, 

பால் - கால் கப், 

நெய் - அரை கப், 

சிறிய துண்டு களாக்கிய முந்திரி, பாதாம் (சேர்த்து) - கால் கப், 

ஏலக்காய்த் தூள் - சிறிதளவு. 

செய்முறை: 
கெட்டி அவலை தண்ணீரில் போட்டு பிழிந்து மிக்ஸியில் ரவை போல் பொடிக்கவும். மாம்பழத் துண்டு களையும் (தோல் நீக்கி) மிக்ஸியில் அரைக்கவும். 
கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி, பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே கடாயில் மாம்பழ விழுதை வதக்கவும். பிறகு, பால் சேர்க்கவும். சர்க்கரை யையும் சேர்த்துக் கிளறவும். 

இதனுடன் அவல் ரவையையும் சேர்த்துக் கிளறவும். கேசரி கலர், ஏலக்காய்த் தூள் சேர்த்து, மீதமுள்ள நெய்யை விட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். வறுத்து வைத்த முந்திரி, பாதம் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)