டேஸ்டியான கலவை சட்னி செய்வது எப்படி?





டேஸ்டியான கலவை சட்னி செய்வது எப்படி?

0
வெங்காயம் இல்லாத உணவை இந்திய இல்லங்களில் பார்க்கவே முடியாது. எந்த குழம்பு வகையாக இருந்தாலும் வெங்காயம் அவசியம். அதை சமைத்து சாப்பிடுவது தான் வழக்கம்.
டேஸ்டியான கலவை சட்னி செய்வது எப்படி?
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைய உள்ளது.

வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேக வைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டால் லேசாக வாய் துர்நாற்றம் வீசும் என்று சங்கடப்படுவதுண்டு. அதைப் பார்த்தால் உடல் ஆரோக்கியம் கிடைக்காது. 

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. 

சாப்பிட்டு விட்டு சில புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். துர்நாற்றம் ஓடி விடும். சரி இனி சின்ன வெங்காயம் பயன்படுத்தி டேஸ்டியான கலவை சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
என்னென்ன தேவை? 

சின்ன வெங்காயம் – 100 கிராம். 

தக்காளி – 2. 

கடலைப் பருப்பு – ஒரு மேஜைக் கரண்டி. 

உளுந்து – 1 மேஜைக் கரண்டி.

நிலக்கடலை – 1 மேஜைக் கரண்டி. 
காய்ந்த மிளகாய் – 4. உப்பு – தேவையான அளவு. 

தாளிக்க: 

நல்லெண்ணெய் – சிறிதளவு. 

கடுகு – அரை தேக்கரண்டி. 

கறிவேப்பிலை – ஒரு கொத்து. 
எப்படிச் செய்வது? 
கலவை சட்னி - Mix Chutney
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து, வெடித்ததும் கடலைப் பருப்பு, உளுந்து, நிலக்கடலை சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். 

ஒன்றன்பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வாசம் வர வதக்கி, ஆற வைத்து மிக்சியில் நைசாக அரைக்கவும். 

அரைத்த சட்னியை வேறு பாத்திரத்தில் கொட்டி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)