அசத்தலான உருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்வது எப்படி?





அசத்தலான உருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்வது எப்படி?

0
பொதுவாக உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. 
அசத்தலான உருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்வது எப்படி?
உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கு மற்றும் ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு மருந்தாகச் செயல்படும். அதுவும் உருளைக்கிழங்கின் தோலில் அளவுக்கு அதிகமானப் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. 

ஆனால் நாம் என்ன செய்வோம்? அதனை நீக்கிவிட்டுதான் சமைப்போம். ஆனால் இந்தத் தோல்கள் தான் உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.
அதேபோல் உருளைக்கிழங்கு புண்களையும் ஆற்றும். அதாவது வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிறு தொடர்பான கோளாறுகளை நீக்கும். மேலும் இதனால் அசுத்தநீர் தங்காமல் வெளியேறி விடுகிறது.

உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் கூட சிலர் அதனை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது. உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது என ஒரு ஆய்வில் கண்டறியபட்டது. 

தினமும் பீட்சா சாப்பிடுவதால் பெரிதாக ஒரு நண்மைகளும் இல்லை. தீமைகள் நிறைய உள்ளது ஏன் என்றால் பீட்சாவின் மூல பொருள் மைதா. அது போக இது ஒரு ஜங்க் வகை உணவு. 

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும். உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், செரிமான கோளாறு ஏற்படுகிறது.

அதனால் நம் வீட்டிலேயே குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு பீட்சா தோசையை எப்படி? செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

மைதா - 1 கப், 

கோதுமை மாவு - 1 கப், 

அரிசி மாவு - 1 கப், 

உப்பு, எண்ணெய் - தேவைக்கு, 
ரவை - 1/4 கப், 

தக்காளி - 2 கப், 

வெங்காயம் - 2, 

குடை மிளகாய் - 2 டேபிள் ஸ்பூன், 

முந்திரிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், 

துருவிய சீஸ் - 1 கப், 

உதிர்த்து வேக வைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள் ஸ்பூன், 

வெண்ணெய் - சிறிது, 

கொத்த மல்லித் தழை - சிறிதளவு, 

மிளகு தூள் - 1 டீஸ்பூன், 

உருளைக் கிழங்கு - 250 கிராம், 

பச்சை மிளகாய் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்.
மூலநோய் வெளிக்காட்டும் அறிகுறிகள் !
செய்முறை
அசத்தலான உருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்வது எப்படி?
வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும். 
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத் தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். 

மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடை மிளகாய், உருளைக் கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சை மிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, 

அதன் மேல் கொத்த மல்லித் தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைத்து வேக விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)