இறால் உருளைக்கிழங்கு ஃப்ரை செய்வது எப்படி? #friedrice





இறால் உருளைக்கிழங்கு ஃப்ரை செய்வது எப்படி? #friedrice

0
இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
இறால் உருளைக்கிழங்கு ஃப்ரை செய்வது எப்படி?
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 

இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. 
இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். 

அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். 
உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து.

சரி இனி இறால் உருளைக்கிழங்கு பயன்படுத்தி டேஸ்டியான இறால் உருளைக்கிழங்கு ஃபிரை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
விஞ்ஞான முறையில் விஷங்களாகும் பழங்கள்
தேவையான பொருட்கள் :

இறால் – 1/2 கிலோ

உருளை கிழங்கு – 2 பெரியது

மிளகாய் தூள் – தேவையான அளவு

மிளகு தூள் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

எண்ணெய் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :
இறால் உருளைக்கிழங்கு ஃப்ரை செய்வது எப்படி?
இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் இறால், உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும்
ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு நன்றாக 5 நிமிடம் கிளறவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும். 

நன்றாக வெந்து பொன்னிரமாக வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். இறால் 10 நிமிடத்தில் வெந்து விடும். இறால் உருளை கிழங்கு ஃபிரை ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)