ஸ்டஃப்டு மிளகாய் பிரியாணி செய்வது எப்படி?





ஸ்டஃப்டு மிளகாய் பிரியாணி செய்வது எப்படி?

0
மிளகாயில் கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம்.
ஸ்டஃப்டு மிளகாய் பிரியாணி செய்வது எப்படி?
நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும் கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம்.

அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
மிளகாயில் உள்ள Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது.

தேவையானவை: 
பாசுமதி அரிசி - ஒரு கப், 

பஜ்ஜி மிளகாய் - 3, 

கொப்பரைத் துருவல் - கால் கப், 

மிளகாய்த் தூள், தனியாத் தூள் - தலா அரை டீஸ்பூன், 

கரம் மசாலாத் தூள் - கால் டீஸ்பூன், 

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், 

நறுக்கிய கொத்த மல்லி - சிறிதளவு, 

நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 
ஸ்டஃப்டு மிளகாய் பிரியாணி
பஜ்ஜி மிளகாயைக் கீறி விதைகளை நீக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கொப்பரைத் துருவல்,

மிளகாய்த் தூள், கரம் மசலாத் தூள், தனியாத் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து வதக்கி, மிளகாய்கள் ஒவ்வொன்றிலும் அடைத்து 'ஸ்டஃப்' செய்யவும். 

பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை லேசாக வதக்கவும். ஒவ்வொரு மிளகாயையும் 3 துண்டு களாக்கவும். குக்கரில் நெய் விட்டு, ஊற வைத்து தண்ணீர் வடித்த அரிசியை வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். 
துண்டு களாக்கிய மிளகாயைச் சேர்த்து லேசாகக் கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன் கொத்த மல்லி தூவி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)