கரும்பு சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் என பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவை உடலில் தொற்று நோயை எதிர்த்து போராடவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
கரும்பு சாறு உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் டீடாக்ஸ் பானமாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு தொற்று நோய்களுக்கு கரும்பு ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.
உங்கள் அன்றாட உணவில் கரும்புச் சாற்றை சேர்த்துக் கொள்வதால், உங்கள் எலும்புகள் வலுவடையும். இதுல சர்க்கரை பொங்கல் , கற்கண்டு பொங்கல், எல்லாம் தெரியும்
ஆனால் இது என்ன கரும்புச்சாறு பொங்கல் என்று தானே நினைக்கிறீர்கள் சுவையான கரும்புச்சாறு பொங்கல் செய்யலாம்.
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்
நறுக்கிய பேரீச்சை - கால் கப்
முந்திரி - 25 கிராம்
பாசிப் பருப்பு - அரை கப்
கரும்புச் சாறு - 2 கப்
நெய் - சிறிதளவு
ஏலக்காய்த் தூள் - சிறிது போன்ற தேவையான பொருட்களை முதலில் நாம் எடுத்துக் கொள்வோம்.
எப்படி செய்வது :
வெறும் ஒரு வாணலியில் பாசிப்பருப்பை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள பச்சரிசியோடு சேர்த்து கழுவ வேண்டும்.
பின்னர் குக்கரில் இதனை இட்டு இரண்டு கப் கரும்பு சாறு மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து கொள்ள வேண்டும். கவனமாக மூன்று விசில்கள் வரும் வரை நன்றாக வேக வைத்து இறக்கவும்.
குக்கரில் பிரஷரானது போனதும் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கி நறுக்கி வைத்துள்ள பேரீச்சை, முந்திரி மற்றும் ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து
அதை பொங்கலில் இட்டுக் கிளறியப் பின்னர் அனைவருக்கும் பரிமாறுங்கள். மேலும் கரும்புச்சாறே பொங்கலுக்கு தேவையான இனிப்பைத் தருவதால் இதற்கு சர்க்கரை தேவையில்லை.
மேலும் தங்களுக்கு தேவைப் பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான கரும்பு சாறு பொங்கல் ரெடி.