சுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?





சுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?

0
தயிரில் அதிகமான புரோபயாடிக் உள்ளது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியாக துணை புரிகிறது. மேலும் நமது செரிமானத்திற்கும் மெட்டபாலிஸத்திற்கும் தயிர் உதவுகிறது. 
தயிர் சிக்கன் வறுவல்
நார்ச்சத்து நிறைந்த தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவை ஏற்படாது. முதலில் பாலை திக்காக காய்ச்சி அதை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். 

பின்பு அந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி, அதில் 3 அல்லது 4 பச்சை மிளாயை காம்புடன் சேர்க்க வேண்டும். அந்த பாத்திரத்தை மூடி அப்படியே 12மணி நேர வெளியில் வைக்க வேண்டும். 

அவ்வளவு தான் காலை விடிந்ததும் பார்த்தால் கெட்டியான தயிர் ரெடி.பெரும்பாலும் அனைவருமே இரவு நேரத்தில் எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். 
எனவே தயிர் என்பது செரிமானத்தை நிதானமாக்கும் என்பதால், தயிரை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருப்பவர்கள் பால் பொருட்களை செரிமானம் செய்ய முடியாது. 

சரி இனி தயிர் சிக்கன் பயன்படுத்தி சுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள் :
சிக்கன் – அரை கிலோ

மிளகுதூள் – ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி

தயிர் – 4 தேக்கரண்டி

பிரட் தூள் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

உப்பு – அரை தேக்கரண்டி

செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத் தில் சுத்தம் செய்த சிக்கன், மிளகு தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து அனைத்தை யும் நன்றாக பிரட்டவும்.

பின் அவற்றுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும். (பிரிட்ஜிலும் வைக்க லாம்) பிரட் தூளை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். 

கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் ஊறின சிக்கனை ஒவ்வொன்றாக எடுத்து பிரட் தூளில் போட்டு எல்லா பக்கமும் பிரட் தூள் படுமாறு பிரட்டி எடுக்கவும்.
எண்ணெய் சூடானவுடன் பிரட்டி எடுத்த கோழிகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து எல்லா பக்கமும் திருப்பி விட்டு பொன்னிற மாக பொரித்து எடுக்கவும். சுவையான தயிர் சிக்கன் வறுவல் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)