பருவ நிலைக்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. ஆனால், நம்மில் யாருமே அதைப் பின்பற்றுவ தில்லை.
பருவ நிலைக்குத் தகுந்த உணவுகளை உண்ண வேண்டும்.
அதைக் காலங் காலமாக பின்பற்றி வருபவர்களும் உண்டு. செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற் காகவே தேங்காய்ப் பாலில் செய்யப்பட்ட சொதியும், இஞ்சித் துவையலும் செய்து சாப்பிடுவதும் வழக்கத்தி லிருந்தது.
ஆனால், அவற்றை யெல்லாம் மறந்து விட்டு, மரபார்ந்த பழக்கங் களைப் புறந்தள்ளி விட்டு ஞாயிற்றுக் கிழமை என்றால் அசைவம் என்பதை மட்டும் கட்டாய மாக்கி விட்டோம்.
அசைவமும் நல்ல உணவு தான். என்றாலும், கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?’ என்று கேட்டால், வேண்டாம் என்பது தான் சரியான பதிலாக இருக்கும்.
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் டிரை கிளைசரைடுகளும் (Triglycerides) ‘எல்.டி.எல்’ எனப்படும் கெட்டக் கொழுப்பின் அளவும் அதிகரித்து இதய நோய் வருவதற்கான சூழலை ஏற்படுத்தும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள், குடல் இயக்கத்தை மந்தப் படுத்தும் வாய்ப்பும் உண்டு. அசைவம் என்றாலே நம்மில் பலரும் முன்னி றுத்துவது பிராய்லர் கோழிகளைத் தான்.
ஹார்மோன் ஊசி மற்றும் தீவனங்களைப் போட்டு குறுகிய காலத்தில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை கோடை காலத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் சாப்பிடக் கூடாது. நாட்டுக்கோழி சாப்பிடலாம்.
ஆனால், அதையும் கோடையில் தவிர்ப்பதே சிறந்தது. கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும். வெப்பத்தில் நம் உடல் தகித்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் சூடு நிறைந்த கோழிக் கறியைச் சாப்பிட்டால் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால் வயிற்று வலி, கழிச்சல், மூலம், வேறு சில வயிற்று உபாதைகளும் ஏற்படும். ‘கோழிக்கறி உடலில் சூட்டை உண்டாக்கும் குணமுடையது.
எந்தெந்தக் காலச்சூழலில் என்னென்ன உணவைச் சாப்பிடலாம் என்று வகைப்படுத்தி யிருந்தார்கள் நம் முன்னோர்கள்.
ஆனால், இன்றைக்கு நாம் நம் பாரம்பர்யத்தை மறந்து விட்டோம். புதிது புதிதாக ஏதேதோ உணவுகளைச் சமைத்து, உண்டு மகிழ்கிறோம். அதன் விளைவாகத் தான் புதுப் புது நோய்களும் வரிசைகட்டி நிற்கின்றன.
வியாழக் கிழமைகளில் பயறுக் குழம்பு, வெள்ளிக் கிழமைகளில் சாம்பார் வைக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருந் தார்கள்.

அதற்கு பதிலாக குளிர்ச்சித் தன்மை யுள்ள ஆட்டுக் கறியைச் சாப்பிடலாம்’ என்று சொன்னால் அதுவும் தவறானதே.
ஏனென்றால் வெயில் காலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறால் மலச்சிக்கலும் வயிற்று உபாதைகளும் ஏற்படும்.

அசைவம் சாப்பிட்டுத் தானாக வேண்டும், அது இல்லாமல் முடியாது என்பவர்கள் மீன் குழம்பு வைத்து, குறைந்த அளவில் சாப்பிடலாம்.
அதற்காக மீன் மசாலா, பொரித்த மீனெல்லாம் சாப்பிடக் கூடாது.
கோடை காலத்தில் மறந்தும் கூட சேர்க்கக் கூடாதது நண்டு. அது உடலில் எரிச்சலை ஏற்படுத்தும். அலர்ஜி உண்டாகவும் அதிக வாய்ப்புண்டு.
ஃபாஸ்ட்ஃபுட் என்று கூறப்படும் பீட்சா, பர்கர், சிப்ஸ், சிக்கன் ஃப்ரை, கொழுப்பு அதிகமுள்ள உணவு களையும் வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது. ‘கோடை காலத்தில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
ஆகவே நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதுடன் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் மசாலா உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிக புரதம், கொழுப்புச் சத்து நிறைந்த மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, சிக்கன் போன்ற வற்றைத் தவிர்க்க வேண்டும். மட்டன், சிக்கன் போன்றவை செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்;
சரும நோய்களை உண்டாக்கும். கை கால் மற்றும் முகத்தில் வியர்க்குரு, தேமல், கட்டிகள், அம்மை போன்ற நோய்கள் வரவும் அசைவ உணவுகள் காரணமாக வாய்ப்புண்டு.
நண்டு, இறால் போன்ற வற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி, நீர்ச்சத்துக் குறைபாட்டை உண்டாக்க லாம்.
இதே போல் தந்தூரி வகை உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகளும் வேண்டாம். அசைவ உணவுகள் சாப்பிட வேண்டும் என்றால், நெத்திலி போன்ற மீன்களைச் சாப்பிடலாம். முட்டை சாப்பிடலாம், அதுவும் அளவாக…