காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் அன்றைய நாளுக்கான ஒட்டு மொத்த எனர்ஜியையும் அதிலிருந்து பெற முடியும்.
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப் பொருள்.இதய நோய் உள்ளவர்கள், கொலஸ்டிரால் உள்ளவர்கள் கூட முழுமையாக வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.
அருமையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி?
மிதமான அளவில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். நீரழிவு பிரச்சினை இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வேர்க்கடலையை முற்றிலும் தவிர்ப்பார்கள்.
ஆனால் இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. வறுத்த வேர்க்கடலையைத் தவிர்த்து விட்டு பச்சை வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.
அது அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தடுத்து வயிறு நிரம்பிய உணர்வையும் தரும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்குத் தேவையான அடிப்படையான ஊட்டச் சத்துக்களான மக்னீசியம், காப்பர், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் பச்சை வேர்க்கடலையில் மிக அதிகமாகவே இருக்கின்றன.
அதோடு பச்சை வேர்க்கடலையில் ஏராளமான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்து, இதயத்தைப் பலப்படுத்துகிறது.
உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி?
தேவையானவை
பார்லி - ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை - அரை கப்,
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய கொத்த மல்லி - சிறிதளவு,
இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,
சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் ஒரு மணி நேரம் ஊற வைத்த பார்லி, வறுத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த பார்லி, வேர்க்கடலை சேர்க்கவும். நறுக்கிய கொத்த மல்லி, தேங்காய் துருவல் சேர்க்கவும். பார்லி வேர்க் கடலை சுண்டல் தயார்.
குறிப்பு
உங்கள்களை சுவைக்க தூண்டும் எண்ணெற்ற சுண்டல் வகைகள். நீங்கள் விழா காலங்களில் உங்களுக்கு தேவையான சுண்டல் வகைகளை சமைத்து சாப்பிடலாம்.
எப்போதும் உணவு பொருட்கள் தூய்மை யாக இருப்பது நன்று.உப்பு மற்றும் எண்ணெய் அளவாக இருத்தால் சுவையாக இருக்கம்.