டூட்டி ஃப்ரூட்டி என்பது சிறிய சதுர வடிவிலான இனிப்பு சுவையில் உள்ள ஒரு தின்பண்டமாகும். இது, ரொட்டி, பிஸ்கட், குக்கீகள் மற்றும் பன்களில் போன்ற தின்பண்டகளில் அலங்காரத்திற் காகவும் சுவைக்காகவும் சேர்க்கப் படுகிறது.
டுட்டி ஃப்ரூட்டி பச்சை பப்பாளியில் இருந்து தயாரிக்கப் படுகிறது. டுட்டி ஃப்ரூட்டியில் மிகவும் பிரபலமானது டுட்டி ஃப்ரூட்டி ஐஸ்கிரீம் ஆகும். இதனை சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இது பல வண்ணங்களில் காட்சியளிப்பதால் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறது. டுட்டி ஃப்ரூட்டி ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். இது உடலிற்கு உடனடி புத்துணர்ச்சியை அளிக்கிறது.
எனவே, உங்கள் அன்றாட உணவில் சிறிதளவு டுட்டி ஃப்ரூட்டியினை சேர்த்து கொள்ளலாம். எனவே, உடல் ஆற்றலின்றி சோர்வாக இருக்கும்ப ட்சத்தில் டுட்டி ஃப்ரூட்டி நல்ல பலனளிக்கும்.
டுட்டி ஃப்ரூட்டியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது, உணவுகளை சுலபாக செரிமானம் செய்ய உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
எனவே, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.
சரி இனி ட்யூட்டி ப்ரூட்டி பயன்படுத்தி டேஸ்டியான பூபேஷ் கேக் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். தேவையானவை :
மைதா - 250 கிராம்,
சர்க்கரை - 250 கிராம்,
வெண்ணை - 250 கிராம்.
முந்திரி, பாதாம் பருப்பு
ட்யூட்டி ப்ரூட்டி,
கிஸ்மிஸ் பழங்கள்
முட்டை - 3.
செய்முறை :
சர்க்கரையை வெண்ணை யுடன் சேர்ந்து நன்கு கலந்துக் கொள்ளவும். முட்டையை அடித்து அதில் சேர்க்கவும்.
கடைசியாக மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தோசை பதம் அளவுக்கு மாவு இருக்கணும்.
இதில் நமக்கு விரும்பிய முந்திரி, பாதாம் பருப்பு வகைகள் அல்லது ட்யூட்டி ப்ரூட்டி, கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து கிளறி மைக்ரோ அவனில் வேக வைத்தால் சுவையான கேக் ரெடி.