பெண்களின் உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal





பெண்களின் உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal

0
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. 
பெண்களின் உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி?
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 
அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதி யாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். 

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும். 

சரி இனி கொள்ளு கேரட் கொண்டு பெண்களின் உடலுக்கு வலுசேர்க்கும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள் : 

கேரட் துருவல் - 1 கப், 

வெங்காயம் - 1 

பூண்டு - 4 பல், 

காய்ந்த மிளகாய் -10, 

உ .பருப்பு - 1 கைப்பிடி, 

க. பருப்பு - 1 கைப்பிடி, 

கொள்ளு - 20 கிராம், 

கடுகு, கறிவேப்பிலை, 

உப்பு - தேவையான அளவு. 
செய்முறை : 
பெண்களின் உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி?
வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும். 

பின்பு மிளகாய் வற்றல், கொள்ளு, உ.பருப்பு, க.பருப்பு இவைகளை தனியாக வறுக்கவும். அனைத்தும் சூடு ஆறியவுடன் கேரட் வதக்கிய கலவையை உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும். 
பின்பு இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உ.பருப்பு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும். 

சுவையான கேரட், கொள்ளு துவையல் ரெடி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு சுவையான சைட்டிஷ் ரெடி.

Post a Comment

0Comments

Post a Comment (0)