சுவையான வாத்து கறி சமையல் செய்வது எப்படி?





சுவையான வாத்து கறி சமையல் செய்வது எப்படி?

0
உலகெங்கிலும் உள்ள ஏராளமான நபர்கள் வாத்து இறைச்சியை ஒரு சுவையான உணவாக அனுபவிக்கிறார்கள். 
சுவையான வாத்து கறி சமையல் செய்வது எப்படி?
வாத்து இறைச்சியின் கொழுப்பில் உள்ள பாஸ்போலிபிட் என்ற வேதிப்பொருள், குறிப்பிடத்தக்க இறைச்சி வாசம் வருவதற்குக் காரணமாக அமைகிறது. 
வாத்து இறைச்சியில் இரும்புச் சத்தும், ஹீம் எனப்படும் வண்ண ஊக்கியும் அதிகளவில் உள்ளதால் இவ்வகை இறைச்சி மற்ற கோழி இறைச்சியை காட்டிலும் வண்ணம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. 

கர்ப்ப காலத்தில் உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்க வாத்து இறைச்சி உதவுகிறது. 

சீரான, சத்தான உணவைக் கொண்டிருக்க உங்களுக்கு உதவ தேவையான அனைத்து வகையான அமினோ அமிலங்கள் உட்பட ஏராளமான புரதங்களை வாத்துக்கறி உங்களுக்கு வழங்குகிறது. 
சுவையான பீட்ரூட் ரைஸ் செய்வது எப்படி?
தேவையானவை :

வாத்து கறி - 1 கிலோ

தக்காளி - 2

பல்லாரி - 2 பெரியது

புளிப்பு இல்லாத தயிர் - 4 மேசைக் கரண்டி

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - 6 மேசைக் கரண்டி

மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

நச்சீரக தூள் - 1/4 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக் கரண்டி
எண்ணெய் - 100 மில்லி

நெய் - 3 மேசைக் கரண்டி

கருவா - 4 பெரிய துண்டுகள்

ஏலக்காய் - 6

கிராம்பு - 5

கசகசா விழுது - 2 மேசைக் கரண்டி

தேங்காய் பால் - 1/2 கப்

முருங்கைக்காய் - 2
செய்முறை :
சுவையான வாத்து கறி சமையல் செய்வது எப்படி?
வாத்து கறியை சுத்தம் செய்து துண்டு களாக்கி மசாலா தூள் 3 மேசைக் கரண்டி, உப்பு, 2 மேசைக் கரண்டி தயிர் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.
முருங்கை காயினை தேவையான அளவு துண்டுக ளாக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி கொள்ளவும். 

தேங்காய் பாலில் கசகசா விழுதை கரைத்து வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் கருவா, கிராம்பு, ஏலம் போடவும். நறுக்கிய பல்லாரியை சிறிதளவு போட்டு நன்றாக வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தயிர் 2 மேசைக் கரண்டி சேர்க்கவும். தாளிப்பில் கறிவேப்பிலை, ரம்பை இலை சேர்க்கவும். அரிந்து வைத்துள்ள தக்காளி, பல்லாரி, பச்சை மிளகாயினை தாளிப்பில் போட்டு நன்றாக வதக்கவும்.
சுவையை தூண்டும் மட்டன் கறி செய்வது எப்படி?
வெங்காயம் வதங்கியதும் மீதி இருக்கும் மசாலா தூள், மஞ்சள் தூள், சோம்பு, மிளகு, நச்சீரகதூள், உப்பு அனைத்தையும் சேர்த்து பிரட்டவும். 

சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல வந்ததும் மசாலா பிரட்டி வைத்துள்ள வாத்து கறியை சேர்த்து நன்றாக பிரட்டவும். 
தீயை குறைத்து வைத்து மசாலா கறியில் சேரும் வரை எண்ணெ யிலேயே 10 நிமிடங்கள் பிரட்டி கொண்டு இருக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தீயின் அளவை கூட்டி குக்கரை மூடி விடவும்.

கறி நன்றாக வெந்ததும் கசகசா கரைத்த தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் நறுக்கிய முருங்கை காயினை போட்டு குக்கரை மூடாமல் தீயை குறைத்து வைத்து வேக விடவும். 
இப்போது கறியின் மேல் நெய்யை ஊற்றி விடவும். முருங்கைக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கி விடவும். வாத்து கறி வேக நேரம் ஆகும். குக்கரில் ஆக்கினா நன்று!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)