வாத்து பெப்பர் ரோஸ்ட் செய்வது எப்படி?





வாத்து பெப்பர் ரோஸ்ட் செய்வது எப்படி?

0
மிளகில் எண்ணற்ற ஊட்டச் சத்துக்களான நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, மாங்கனீஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இந்த மிளகு ரத்தத்தை சுத்திகரிக்கும். 
வாத்து பெப்பர் ரோஸ்ட் செய்வது எப்படி?
வயிறு பிரச்சினை இருப்பவர்கள் மிளகை சாப்பிட்டால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொடுக்கும். 

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. 

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத் தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். 

வாத்து இறைச்சியில் அதிகளவில் ஒலியிக் அமிலம் எனப்படும் பன்செறிவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. அது மட்டுமல்லாமல் பால்மிடிக் அமிலமும் உள்ளது. 
வாத்து இறைச்சியின் தீவனத்தில் மாற்றம் செய்வதன் மூலம் அதிகளவில் பன்செறிவுறாக் கொழுப்பு அமிலங்கள் உள்ளவாறு மாற்றி அமைக்கலாம். முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பது எல்லாருக்கும் தெரியும். 

முட்டையில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். உலகளவில் கோழி முட்டைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 
இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் வாத்து முட்டைகள் அதிகப் புகழ்பெற்று உள்ளது. இதனால் மக்கள் வாத்து முட்டைகளை வாங்க தொடங்கி உள்ளனர். 

தேவையான பொருட்கள்:

வாத்துக்கறி – ½ கிலோ

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தயிர் – ½ கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

தாளிக்க:
காய்ந்த மிளகாய் - 4

மிளகு - 1/2 டீஸ்பூன

பூண்டு பல் - 6

கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க :

காய்ந்த மிளகாய் - 2

மிளகு - 6

தனியா தூள் - 1 டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்
காய்ச்சல் வந்தால் முதலுதவி செய்வது எப்படி?
செய்முறை:
வாத்து பெப்பர் ரோஸ்ட் செய்வது

வாத்துக் கறியை சுத்தம் செய்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். சுத்தம் செய்த வாத்துக் கறியுடன் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்.

பின்னர் வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகிய வற்றை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ள வேண்டும். 
வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திரு க்கும் கறி துண்டுகளை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

மற்றொரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை ஆகிய வற்றை போட்டு தாளிக்கவும். 

பின்னர் தாளித்த வற்றை வேக வைத்த வாத்துக் கறியுடன் சேர்த்து சிறிதளவு மிளகு தூள் மற்றும் கொத்த மல்லி தழை சேர்த்து பிரட்டி இறக்கினால் சுவையான வாத்து பெப்பர் ரோஸ்ட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)