டேஸ்டியான ப்ரைடு மோமோஸ் செய்வது எப்படி?





டேஸ்டியான ப்ரைடு மோமோஸ் செய்வது எப்படி?

0
நம்மைச் சுற்றி செய்கின்ற பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் எல்லாமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது. ஏன் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பிஸ்கட்டுகளில் கூட மைதா மாவு தான். 
ஃப்ரைடு மோமோஸ் செய்முறை
நிறைய பேர் ஹோட்டலுக்கு போனால் கூட புரோட்டோ தான் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இப்படி எல்லா வகை உணவுகளிலும் மைதா மாவு என்பது அவசியமாக விட்டது. 

சுவையான  தவா பரோட்டா செய்வது எப்படி?

உண்மையில் இந்த மைதா மாவினால் ஆன பொருட்களை நாம் வாங்கி சாப்பிடலாமா, இதனால் நமக்கு நன்மையா இல்லை தீமையா இது போன்ற கேள்விகள் இன்றளவும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.

உண்மையச் சொல்லப் போனால் மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் பெறப்படுகிறது. நன்றாக அமைக்கப்பட்ட கோதுமை மாவு ஒரு மாதிரியான பழுப்பு நிறத்தில் இருக்கும். 

இந்த கோதுமை மாவில் பென்சோயில் பெராக்ஸைடு என்ற ரசாயன பொருளை கலந்து மாவை வெண்மையாக்கி விடுகின்றனர். 

இது தவிர மாவை மிருதுவாக்க ஒரு ரசாயனம், செயற்கை நிறமூட்டுகள், தனிம எண்ணெய்கள், சுவையூட்டுகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை சத்து என ஏராளமான பொருட்களையும் சேர்த்து தானெ மைதா மாவை தயாரிக்கின்றனர். 

எனவே இந்த மாவில் ஒரு சத்தும் கிடையாது எல்லாமே ரசாயனம் தான் என்கிறார்கள். சரி இனி மைதா பயன்படுத்தி டேஸ்டியான ப்ரைடு மோமோஸ் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

மாவு செய்ய…

மைதா – 1/2 கப்,

உப்பு, தண்ணீர் – தேவைக்கு,

எண்ணெய் – சிறிது.

பூரணத்திற்கு…

கேரட் – 1/2 துண்டு,

பீன்ஸ் – 10, கோஸ்,

வெங்காயம் – தலா 1/4 கப்,

சிக்கன் – 50 கிராம்,

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் – தலா 1/4 டீஸ்பூன், 

இஞ்சி – 2 துண்டு,

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,

எண்ணெய் – 1 டீஸ்பூன்,

உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?

மாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். கோஸ், வெங்காயம் சேர்த்து காட்டன் துணியில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 

பின்பு கொடுத்த பூரணத்திற் கான பொருட்களை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். 
பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டை களாக்கி சின்னச் சின்ன சப்பாத்தி களாகத் தேய்த்து பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். 

கடாயில் எண்ணெயை காய வைத்து வேக வைத்த மோமோஸ் களை பொரித் தெடுத்து சாஸுடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)