டேஸ்டியான கொள்ளு பருப்பு வடை செய்வது எப்படி? #Vadai





டேஸ்டியான கொள்ளு பருப்பு வடை செய்வது எப்படி? #Vadai

0
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
டேஸ்டியான கொள்ளு பருப்பு வடை செய்வது எப்படி?
இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். 

உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப் படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். 

குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. சரி இனி கொள்ளு பருப்பு பயன்படுத்தி டேஸ்டியான கொள்ளு பருப்பு வடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
என்னென்ன தேவை?

முளை கட்டிய கொள்ளு பருப்பு – 1 கப்,

வெங்காயம் – 4,

பச்சை மிளகாய் – 2, உப்பு,

எண்ணெய் - தேவைக்கு,

பெருங்காயத் தூள், சமையல் சோடா – தலா 1 சிட்டிகை,

கொத்த மல்லித் தழை, கறிவேப்பிலை – சிறிது.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
எப்படிச் செய்வது?
டேஸ்டியான கொள்ளு பருப்பு வடை செய்வது எப்படி?
கொள்ளு பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து கரகரவென அரைத்துக் கொள்ளவும். 
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சமையல் சோடா, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 

சிறு சிறு உருண்டைகள் செய்து வடை களாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிற மாக பொரித் தெடுத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)