அசைவ உணவுகளில் முட்டைக்கென்று தனி இடமுள்ளது. அந்த வகையில் சமீப காலமாக அசைவ பிரியர்கள் காடை முட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இதற்கு என்ன காரணமென்றால் காடை முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது தான் முதல் காரணம் என்று சொல்லலாம்.
இந்த காடை முட்டை பார்ப்பதற்கு கொஞ்சம் சிறிதாகவும், இதன் முட்டை ஓடு சற்று கரும்புள்ளிகளுடன் காணப்படும்.
இந்த காடை முட்டையை சாப்பிடுவதினால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும் என்றால் நம்புவீர்களா..? ஆம்
இந்த காடை முட்டையை சாப்பிடுவதினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இரத்த சோகை, அல்சர் போன்ற பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்த முடியும்.
சரி இந்த பதிவில் காடை முட்டையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளதுகாடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது.
அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது. கோழி முட்டையில் 50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140% உள்ளது என்றால் பாருங்கள்.
அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், ஒவ்வாமை பிரச்சனை அல்லது அலர்ஜி தடுக்கப்படும்.
ஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன் உள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப் போராடும்.
மேலும் காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியைவிடக் கூடுதல் உயிர்ச்சத்துப் பயனும் (micro nutrients) உள்ளது. சரி இனி காடை வறுவல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
காடை - 4
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
காடையை சுத்தம் செய்து 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த காடையை போட்டு
அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், தயிர், மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், தயிர், மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காடை துண்டை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.
சுவையான காடை வறுவல் தயார்.