இட்லி, தோசைகளின் இடத்தை பாஸ்தா, பீட்சா பிடித்து விடுமோ என அச்சமாக இருக்கிறது. இவை நூடுல்ஸ் வகையைச் சார்ந்தவை தான்.
பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப் படுகிறது. மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட உணவுப் பொருள்.
இதில் நார்ச் சத்து உள்பட எந்தச் சத்துமே இல்லை என்பதால், உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது. பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது.
இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மை கொண்டது. இது, பெரும் பாலானவர்களுக்கு செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்தும். பாஸ்தா ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால், ஆரோக்கியமானது அல்ல.
நூடுல்ஸ் வகை உணவுகளைச் செய்வது போன்றே பாஸ்தாவையும் தயாரிக்கலாம். காய்கறிகள், காளான், இறைச்சி, முட்டை போன்றவற்றையும் சேர்த்து இதைச் சமைக்கலாம்.
காலையில் பழத்துண்டுகள், தேன் சேர்த்து சாப்பிடலாம். இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை.
சரி இனி மக்காரோனி பயன்படுத்தி டேஸ்டியான ருசியான மக்காரோனி சூப் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை
மேக்ரோனி - 2 டேபிள் ஸ்பூன்
வெந்த சோளமுத்து - 1 டேபிள் ஸ்பூன்,
வெங்காயத் தாள் - 1 டேபிள் ஸ்பூன் (அரிந்தது)
வெண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு
சர்க்கரை - தேவையான அளவு
சோள மாவு - 1 டீஸ்பூன்
தக்காளி - 1,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் மேக்ரோனியை தேவையான தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பாலில் வெண்ணெய் விட்டு சோள மாவை போட்டு குறைந்த தணலில் 2 நிமிடம் வறுக்கவும்
தக்காளி, கேரட், வெங்காயத் தாளை நீர் விட்டு உப்பு சேர்த்து வேக விட்டு வடிகட்டி ஸ்டாக் தயாரித்துக் கொள்ளவும். வறுத்த சோள மாவில் ஸ்டாக் (காய்கறி வெந்த நீர்) சிறிது ஊற்றி பேஸ்ட் போலத் தயாரிக்கவும்.
வெந்த மேக்ரோனி, உப்பு, சர்க்கரை, சோள மாவு பேஸ்ட், மிளகுத் தூள் எல்லா வற்றையும் ஸ்டாக்குடன் சேர்த்து மீண்டும் சூடாக்கவும். வெந்த சோள முத்தை தூவி சூடாகப் பரிமாறவும்.