வெஜிடபிள் அவல் சாலட் செய்வது எப்படி?





வெஜிடபிள் அவல் சாலட் செய்வது எப்படி?

0
காலை உணவில் இந்த அவலை எடுத்து கொள்ளும் போது அதிக பலனை தருகிறது.. உடலில் நோய் எதிர்ப்பு கூடுகிறது. இதனால், வயிற்றுப்புண், வாய்ப்புண்களும் ஆறும். 
வெஜிடபிள் அவல் சாலட் செய்வது எப்படி?
புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுப்பதில், சிவப்பு அவலுக்கு பெரும் பங்கு உள்ளது. சர்க்கரை நோயாளிகள், சிவப்பு அவலை சாப்பிடலாம். 

அவலை உணவில் சேர்ப்பதால், திடீரென சர்க்கரை அளவு அதிகரிக்காது. இதிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது. 
பட்டை தீட்டப்படாத அரிசியிலிருந்து தயாரிக்கப் படுவதால், இதை அளவுடன் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். அதே போல, ரத்தசோகையால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான். 

குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த சிவப்பு அவலை சாப்பிட வேண்டும். ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதம் இதுவாகும். 

உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், அரிசி அவலுக்கு பதிலாக கோதுமை அவல் உணவில் சேர்க்கலாம். அல்லது மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, தினை, சாமை, வரகு, கம்பு, என சிறுதானியங் களிலிருந்து பெறப்படும் அவலை உணவில் சேர்த்து கொண்டால் நார்ச்சத்து அதிகரிக்கும். 
நாள் முழுவதும் தேவைப்படும் சத்துக்கள் அவல் மூலம் கிடைத்து விடுகின்றன. அவல் செய்யும் போது, அதே அளவுக்கு காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் அதைவிட சத்துக்கள் அதிகமாக கிடைக்கும். 

வளரும் குழந்தைகளுக்கு அவல் மிகச்சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருளாகும். அவலில் பால் அல்லது தண்ணீர் கலந்து கருப்பட்டி சேர்த்து தரலாம். இதனால் உடலிலுள்ள செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும். மூளை செல்களையும் புத்துணர்ச்சியாக்கும்.

புற்றுநோயினைத் தடுக்கும் கேரட் !

தேவையான பொருட்கள் :

அவல் - 1 கப்

தயிர் - 1 கப்

வெள்ளரிக் காய் - 1 சிறியது

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 2

கேரட் - 1 சிறியது

சின்ன வெங்காயம் - 5

பால் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெஜிடபிள் அவல் சாலட்
வெள்ளரிக்காய், கேரட்டை துருவிக் கொள்ளவும். ப.மிளகாய், தக்காளி, சின்ன வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அவலை நன்றாக கழுவி கொள்ளவும்.

கழுவிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பால் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 

ருசியான கச்சா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

பின்னர் அதனுடன் தயிர், உப்பு, துருவிய காய்கறிகள், அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். சூப்பரான சத்தான வெஜிடபிள் அவல் சாலட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)