அருமையான மட்டன் கொழுப்பு குழம்பு செய்வது எப்படி?





அருமையான மட்டன் கொழுப்பு குழம்பு செய்வது எப்படி?

0
ஒருவரது பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஆட்டிறைச்சி பெரிதும் உதவி புரிகிறது. ஆட்டிறைச்சி புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த சத்தான உணவுப் பொருள் மட்டுமல்ல. 
அருமையான மட்டன் கொழுப்பு குழம்பு செய்வது எப்படி?
ஆட்டிறைச்சி மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது. ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் மற்றும் இதில் ஒள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது. 
ஆய்வுகளிலும் மட்டன் கவனத்தை ஈர்க்கும் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஆட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பளித்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

மட்டனில் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றம் வலிமைக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன. 

எனவே மட்டனை வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சர்க்கரை நோயாளிகளில் தங்கள் இரத்த சர்க்கரை அளவை உணவுகளின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். 

குறிப்பாக மட்டனை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. மட்டனில் பி வைட்டமின்கள் அதிகம் உள்ளன. 

இவை உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் பருமனடைவதைத் தடுக்கிறது. மனித உடலில் மிகவும் தேவையான ஒரு சத்து தான் இரும்புச்சத்து. 

ருசியான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?

உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகை வரும் அபாயமும் குறையும். சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்க
தேவையானவை :

மட்டன் நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல், சுவரொட்டி - கால் கிலோ

சின்ன வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 2

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 4

கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க :

தேங்காய் - அரை மூடி

சோம்பு - 2 டீஸ்பூன்

செய்முறை :
அருமையான மட்டன் கொழுப்பு குழம்பு செய்வது எப்படி?
நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல் மற்றும் சுவரொட்டியை நன்கு சுத்தம் செய்யவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

இத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல் மற்றும் சுவரொட்டி சேர்த்து நன்கு வதக்கவும். 
வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?
இத்துடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் - சோம்பு விழுதைச் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். இறுதியாக கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும். 

இட்லி, தோசை, ஆப்பத்துக்கு சுவையான குழம்பு ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)