சத்தான கீரை சீஸ் கட்லெட் செய்வது எப்படி?





சத்தான கீரை சீஸ் கட்லெட் செய்வது எப்படி?

0
உலகெங்கிலும் உள்ள பல கலாச்சார மக்கள் சீஸ் (பாலாடைகட்டி) தயாரிக்கும் நடைமுறையை சுமார் 8,000 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருகின்றனர். 
சத்தான கீரை சீஸ் கட்லெட்
தற்போதைய சூழலில் உலகளவில் நடைபெற்று வரும் பால் உற்பத்தியின் பெரும்பகுதி பசுவின் பாலாக இருந்து வருகிறது. 

ஆனால் பல நூறாண்டுகளுக்கு முன்னர் ஒட்டகங்கள், காட்டெருமைகள், ஆடுகள் உள்ளிட்ட பல விங்குகளில் இருந்து பாலை பெற்று மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். 

பாலில் காணப்படும் சர்க்கரை வகையான லாக்டோஸ் ஒரு சிலருக்கு ஜீரண கோளாறை ஏற்படுத்தும். இந்த அலர்ஜி உள்ளவர்கள் தைரியமாக சீஸை சாப்பிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 
சீஸ் நம் மண்ணுக்கும் உடலுக்கும் அந்நிய உணவு. நம் பாரம்பர்ய உணவுடன் சுவைக்காக இவற்றைச் சேர்த்துச் சாப்பிடுவது தவறில்லை, இருந்தாலும் இதுவே முக்கியமான உணவு என அதற்குப் பழகிவிடக் கூடாது. 

நம் நாட்டின் தட்பவெப்ப நிலையையும், நம் வாழ்க்கை முறையையும் மனதில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் வாழ்வது தான் ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும். 

சீஸை அதிகம் சாப்பிடாத வரை எலும்புகளை வலிமையாக்குவது முதல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது வரை நமக்கு பல நன்மைகளை அளிக்கும். 

கால்சியம், கொழுப்பு மற்றும் புரோட்டினின் சிறந்த மூலமாக சீஸ் இருக்கிறது. தவிர சீஸில் ஜிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ரிபோஃப்ளே உள்ளிட்டவற்றுடன் அதிக அளவு வைட்டமின்ஸ் ஏ மற்றும் பி-12 காணப்படுகிறது. 

எனவே சீஸ் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் தருகிறது. மேலும் சீஸில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே2 உள்ளிட்டவையும் அடங்கி இருக்கிறது. 
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரையைக் கொண்டு இன்னைக்கு கீரை சீஸ் கட்லெட் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கப் போறோம்.
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4

பாலக்கீரை - ஒரு பௌல்

பன்னீர் - 100 கிராம்

சீஸ் கட்டி - 2

மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

ரஸ்க் தூள் - அரை கப்

எண்ணெய் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் நீக்கி விட்டு மசித்துக் கொள்ளவும்.

அத்துடன், கழுவி பொடியாக நறுக்கிய கீரை, துருவிய பன்னீர் மற்றும் சீஸ், மைதா, உப்பு தேவை யென்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். 
இருமல் மருந்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க !
இந்தக் கலவையை கொஞ்சமாக எடுத்து கட்லெட் வடிவத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும். 

தயார் நிலையில் உள்ள மாவுத் துண்டுகளை ரஸ்க்குத் தூளில் பிரட்டி எடுத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதனை, தக்காளி சாஸ்ஸில் தொட்டு சாப்பிட்டால் அடடே..! சுவையான கீரை சீஸ் கட்லெட் ரெடி..!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)