ருசியான இறால் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி? #friedrice





ருசியான இறால் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி? #friedrice

0
இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும்  மற்றும் வைட்டமின் டி அடங்கியுள்ளது. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. 
ருசியான இறால் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
இதில் கார்போ ஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்பு பவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். 

புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.

கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. 
இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும். சரி இனி இறால் கொண்டு ருசியான இறால் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

இறால் - 250 கிராம்

பாஸ்மதி அரிசி - 4 கப்

மீன் சாஸ் - 2 டீஸ்பூன்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

வெங்காயத் தாள் - 1 ( நறுக்கவும்)

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

பூண்டு - 4 பல்

முட்டை - 3

கேரட் - 1 ( நறுக்கவும்)

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 கப் ( நறுக்கவும்)

கொத்த மல்லி தழை - 1 கட்டு ( நறுக்கவும்)
செய்முறை
ருசியான இறால் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, இறால் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் அடித்து வைத்த முட்டையை ஊற்றி கிளறி விட்டு வேக வைக்கவும். 

முட்டை பொடி பொடியாக ஆனதும் வேக வைத்த சாதத்தைப் போட்டு மீன் சாஸ், சோயா சாஸ், சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து கிளறி விடவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், வெங்காயத் தாள் சேர்த்து வேக வைக்கவும். இறால் ஃப்ரைடு ரைஸ் தயாரானதும் அதன் மேலாக கொத்த மல்லி தழையை தூவி விட்டு பரிமாறவும். இறால் ஃப்ரைடு ரைஸ் ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)