தேவையானவை
துவரம்பருப்பு – 100 கிராம்
இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம்
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
கொத்துமல்லி – சிறிதளவு
வெங்காயம் – 1
செய்முறை :
முதலில் துவரம் பருப்பைக் கழுவி நன்றாக வேக விடவும். வெந்ததும், வடி கட்டவும்.
வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி -பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒரு முறை கொதிக்க விடவும்.
அடுப்பி லிருந்து இறக்கியதும் பரிமாறுவ தற்கு முன் மிளகுத் தூள், நறுக்கிய கொத்த மல்லி தூவிக் கலந்து பரிமாறவும்