கோதுமை வடநாட்டு உணவுப் பொருள் என்ற நிலைமாறி இன்று தென்னிந்திய உணவுப் பழக்கத்திலும் அதிகம் இடம் பிடித்து விட்டது.
சப்பாத்தி மற்றும் பூரி விரும்பி சாப்பிடுகி றவர்கள் அதிகம். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங் களும் பலராலும் விரும்பி சாப்பிடப் படுகிறது.
மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப் படுவார்கள். அதற்கு மாவு பிசையும் போது சில எளிய வழி முறைகளை கடை பிடித்தாலே போதுமானது.
மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப் படுவார்கள். அதற்கு மாவு பிசையும் போது சில எளிய வழி முறைகளை கடை பிடித்தாலே போதுமானது.
அதற்கான சில டிப்ஸ்...
* சுக்கா ரொட்டிக்கு மாவு தயாரிக்கும் போது, கோதுமை மாவுடன் கொதிக்கும் வெந்நீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் மென்மையான சுக்கா ரொட்டிகளைப் பெறலாம்.
பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்து விட்டு, ரொட்டி தயாரிக்க வேண்டும்.
பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்து விட்டு, ரொட்டி தயாரிக்க வேண்டும்.
* சமோசாவிற்கு மாவு பிசையும் போது மைதா மாவுடன் சிறிது சோளமாவு சேர்த்து பிசைந்தால் வெகு நேரம் மொறு மொறுப்பாக இருக்கும்.
* கோதுமை அடை செய்ய கோதுமை மாவுடன், கடலை மாவு, தயிர் சேர்த்து பிசைந்தால் அடை மிருதுவாக இருக்கும்.
* பூரி தயாரிக்க மைதாவுடன், கோதுமை மாவு, சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.
* பூரி மாவுடன் சிறிது குலோப் ஜாமுன் மிக்ஸ் சேர்த்து பிசைந்தால் பூரிக்கு சூப்பர் டேஸ்ட் கிடைக்கும்.
* சோளமாவு சப்பாத்தி செய்ய வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து, மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
* பாதுஷா செய்ய மைதா மாவுடன், தயிர், டால்டா சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக திரிதிரியாக வரும்.
* தந்தூரி ரொட்டி செய்ய மாவில் கொதிக்கும் தண்ணீர், உப்பு, சோடாமாவு சேர்த்து பிசையலாம்.
* கடலை மாவு பப்படம் செய்ய கடலை மாவுடன் சிறிது மைதா கலந்து பிசைந்து தயாரியுங்கள்.
* சோமாஸ் செய்யும் போது மைதாவுடன் சூடான பால் கலந்து மாவு தயாரிக்கவும்.
* பரோட்டா செய்ய மைதாவுடன், கால் பங்கு கோதுமை மாவு கலந்து காய்ச்சிய எண்ணெய், தண்ணீர் கலந்து இலகுவாக பிசையவும்.
* ருமாலி ரொட்டி (மிகவும் மெல்லிய மைதா சப்பாத்தி) செய்ய மைதாவுடன் காய்ச்சிய எண்ணெய் தண்ணீர், சிறிது சீஸ் சேர்க்கவும்.
* தேப்னா செய்ய கோதுமை மாவுடன், கடலை மாவு, ரவை, அரிசிமாவு சேர்த்து பிசையுங்கள்.
* மசாலா சப்பாத்தி செய்ய கோதுமை மாவுடன் மிளகு, சீரகம், புதினா, கொத்த மல்லி, மசித்த பாலக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து பிசையலாம்.
* பருப்பு- தயிர் கூட்டு செய்யும் போது வேக வைத்த பருப்புடன், காய்கறி, தயிர் கலந்து, இறக்கும் போது சிறிது மைதா கலந்து விட்டால் கூட்டு வெண்மை யாக, சுவையாக இருக்கும்.