மலச்சிக்கல் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நம் உண்ணும் உணவுகள் ஜீரண மடையாமல் வயிற்றுக்குள் தங்கி விடுவது தான்.
நாம் உண்ணுகின்ற உணவு சரியாக ஜீரண மாவதைப் பொறுத்து தான் நமது உடல் மலச்சிக்கலை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
அந்த வகையில் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
பச்சை பட்டாணியில் நார்ச்சத்து அதிகம் இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த பட்டாணி நாம் சாப்பிட்ட 90 முதல் 120 நிமிடங்களுக்குள் ஜீரணமாகி விடும்.
பீச், செர்ரி போன்ற பழங்கள் நாம் சாப்பிட்ட 40 நிமிடங் களுக்கு உள்ளாகவே ஜீரணமாகி விடும். நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் பால் ஜீரண மாவதற்கு கிட்டதட்ட 4 முதல் 5 மணி நேரமாவது ஆகுமாம்.
வேக வைத்த காய்கறிகள் சாப்பிட்ட 40 நிமிடங் களுக்குள் ஜீரணமாகி விடுகின்றன. வேக வைத்த காய்கறிகள் ஜீரணிப்ப தற்கும் பச்சை காய்கறிகள் ஜீரண மாவதற்கும் நிறைய வித்தி யாசங்கள் உண்டு.
நாம் உணவில் சேர்க்கும் மிளகாயும் கிட்டதட்ட அரை மணி நேரம் முதல் 40 நிமிடங் களுக்குள் மிளகாய் ஜீரணமாகி விடுகிறது.
நாம் குடிக்கும் பழச்சாறுகள் அனைத்தும் நாம் குடித்த 20 முதல் 30 நிமிடங்களுக் குள்ளாகவே ஜீரணமாகி விடும். நாம் குடிக்கும் தண்ணீர் கிட்டதட்ட 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கின்றன.
சிறு தானியங்கள் ஜீரண மாவதற்குக் கிட்டதட்ட 90 நிமிடங்கள் (ஒன்றரை மணி நேரம்) எடுத்துக் கொள்கிறது. முலாம்பழம் ஜீரணமடைய 30 நிமிடங்கள் மட்டுமே எடுக்குமாம். உடல் சூடு குறைவதோடு எளிதிலும் ஜீரணமாகும். உடலும் ஆரோக்கியம் பெறும்.
பீட்ரூட் மட்டும் ஜீரண மடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதாம். காலிஃபிளவர் நாம் சாப்பிட்டு 45 நிமிடங்களுக் குள்ளாக ஜீரண மடைந்து விடுகிறது.
மீன் நாம் சாப்பிட்டு 45 முதல் 60 நிமிடங்கள் (அதாவது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக் குள்ளாக) ஜீரமடைய எடுத்துக் கொள்ளுமாம். மக்காச் சோளம் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குள் ஜீரணமாகி விடும்.
நாம் சாப்பிடும் வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள் தான் சாப்பிட்ட 20 முதல் 30 நிமிடங்களுக் குள்ளாகவே ஜீரணமாகும். திராட்சை பழம் நாம் சாப்பிட்ட 30 நிமிடங் களுக்குள் ஜீரணமாகி விடும்.
பிரக்கோலி எளிதில் ஜீரணமடையக் கூடிய தாகவும் இருக்கிறது. சாப்பிட்டு 40 நிமிடங் களுக்குள் ஜீரணமடைந்து விடுகிறது.
அரிசி, கோதுமையுடன் சேர்த்து சாப்பிடுகிற மற்ற காய்கறிகள் வேகமாக ஜீரணமடைந்த பின், அரிசியோ கோதுமையோ சாப்பிட்டு 3 மணி நேரம் வரை ஆகிறது ஜீரண மடைகின்றது.
வேக வைத்த முட்டை ஜீரணமடைய 2 மணி நேரம் ஆகும். மதிய இடைவேளை உணவு எடுத்துக் கொள்ளும் வரை உங்களுக்கு பசி தாங்கிக் கொள்ள முடியும்.
சிக்கனை ஜீரணமடை வதற்கான ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. பச்சையாகச் சாப்பிடும் கேரட் கிட்டதட்ட 50 நிமிடங்கள் ஆகுமாம் ஜீரண மடைவதற்கு.
புரதமும் நார்ச்சத்தும் நிறைந்த கொண்டைக்கடலை. கிட்டதட்ட 90 முதல் 120 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. பொதுவாக ஆரஞ்சு மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்கள் வெகு விரைவில் ஜீரணமாகி விடும்.
அதிக பட்சமாக அரை மணி நேரத்திற் குள்ளாகவே ஆரஞ்சு மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்கள் ஜீரணமடைந்து விடும்.
முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் ஜீரணமடைய கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஆகும் அவை ஜீரணமாக.
மட்டன், மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் ஜீரணமாக கிட்டதட்ட 3 மணி நேரங்களு க்கும் மேலாக எடுத்துக் கொள்கின்றன.