பல்வேறு விதமான சூப்பர்ஃபுட்களில் கீரை வகைகளுக்கு தனி இடம் உண்டு. கண்ணை கவரக்கூடிய நிறம் மற்றும் அற்புதமான சுவையுடன் கீரைகள் ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்குகின்றன.
ஆனால் கீரைகளை தினமும் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக நமது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது.
கீரைகளில் வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலேட், இரும்பு சத்து மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது.
கீரைகளை தினமும் சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. அதோடு கீரைகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்து நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
தேவையான பொருட்கள் :
ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்
நாட்டு முட்டை - 3
வெங்காயம் - ஒன்று
ப.மிளகாய் - 2
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்
நாட்டு முட்டை - 3
வெங்காயம் - ஒன்று
ப.மிளகாய் - 2
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ப.மிளகாய், வெங்காய த்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும். ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் சுத்தம் செய்த கீரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, சுவையான கீரை ஆம்லெட் தயார்.
கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, சுவையான கீரை ஆம்லெட் தயார்.
குறிப்பு :
ஆரோக்கிய பலன்களை கணிப்பதற்கு முன்பாக சுவையின் அடிப்படையில் முட்டை எல்லோருக்கும் பிடித்தமானது. இறைச்சி உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கும் நபர்கள் கூட முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதே சமயம் அறிவியல் கூற்றுப்படி முட்டை சைவம் என்பது வேறு கதை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமான உணவுப் பொருளில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
அவித்த முட்டை, முட்டை பொறியல், ஆம்லெட், ஆஃப்பாயில், புல்ஃபாயில், முட்டை மாஸ் என்று வெவ்வேறு வெரைட்டியாக முட்டையை நாம் சுவைத்து வருகிறது.
தோராயமாக ஒரு முட்டையில் 72 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 கிராம் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.
நம் தசைகளின் வளர்ச்சி மற்றும் சீரமைப்புக்கு ஏதுவான அமினோ அமிலங்கள் முட்டையில் உள்ளன. முட்டையில் விட்டமின் டி, பி12 மற்றும் ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் உள்ளன.
நம் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்வதற்கும், ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் இது பலன் உள்ளதாக அமையும். மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான கோலின் என்னும் சத்து இதில் உள்ளது.