சுவையான ப்ரோக்கோலி கேரட் சாலட் செய்வது எப்படி?





சுவையான ப்ரோக்கோலி கேரட் சாலட் செய்வது எப்படி?

0
ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. 
சுவையான ப்ரோக்கோலி கேரட் சாலட் செய்வது எப்படி?
அதாவது இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையினை நிச்சயம் குறைக்கும். 
ப்ராக்கோலி கால்சியம் சத்தினை அதிகம் கொண்டதாக உள்ளதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதாகவும், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது. 

கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. காலையில் கேரட்டை உட்கொள்வது சருமத்தை மேம்படுத்துகிறது, கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் சருமத்தை ஆரோக்கிய மாக்குகிறது மற்றும் கண்களுக்கும் மிகவும் முக்கியமானது.

ஒரு கப் கேரட் சாறு பீட்டா கரோட்டின் போன்ற பல வகையான ஆக்ஸிஜனேற்றங்களால் நிரப்பப்பட்டவுடன், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றது. 

இருப்பினும், தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால், மக்கள் பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

ப்ரோக்கோலி வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக் கீரையினைப் போல் ஞாபக சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது. ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. 

சரி இனி ப்ரோக்கோலி கேரட் கொண்டு சுவையான ப்ரோக்கோலி கேரட் சாலட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

வெயிலால் வரும் சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கான இயற்கை வைத்தியம் !

தேவையான பொருட்கள் : 

ப்ரோக்கோலி - 100 கிராம்

கேரட் - 50 கிராம்

பெங்களூர் தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

புதினா - சிறிதளவு

கொத்த மல்லித் தழை - சிறிதளவு

மிளகுத் தூள் - தேவையான அளவு.

பாதாம் பருப்பு மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் !

செய்முறை : 
சுவையான ப்ரோக்கோலி கேரட் சாலட் செய்வது எப்படி?
ப்ரோக்கோலியை தண்டுடன் நறுக்கி வைக்கவும். வெங்காயம், புதினா, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். 

நறுக்கிய ப்ரோக்கோலியை ஆவியில் வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வதக்கிய ப்ரோக்கோலி, கேரட், தக்காளி, பெரிய வெங்காயம், போதுமான உப்பு, மிளகுத்தூளை சேர்த்து நன்றாக பிரட்டவும். 

நம் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள யோகா செய்யுங்கள் ! 

கடைசியாக அதில் எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்த மல்லித் தழை, புதினா சேர்த்து காய்கறிகள் மீது தூவினால் சுவையான ப்ரோக்கோலி சாலட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)