இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பனீர். அசைவத்தை காட்டிலும் பன்னீரில் புரதசத்து அதிகம் உள்ளது.
பனீர் ஒரு ஆரோக்கியமான பால் உணவாகும். தினசரி பனீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமது உடல் ஆரோக்கியமானது மேம்படுகிறது. மேலும் இது அருமையான சுவையை கொண்ட ஒரு உணவாக உள்ளது.
சாதாரணமாக இந்திய மக்கள் பால் தொடர்பான உணவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள், இதனால் இந்தியாவில் பனீர் அதிகமாக பயன்படுத்துவதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் இருவருமே விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாக பனீர் உள்ளது. ஆனால் அதிகப்படியாக பனீரை உணவாக சாப்பிடும்போது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது.
சைவ உணவு உண்பவர்களுக்கு நன்மை பயக்கும் உணவாக பனீர் உள்ளது, ஏனெனில் பனீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இது உதவுகிறது.
மேலும், இதில் செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே நன்மை பயக்கிறது.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறும் போது பனீர் உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் அதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
உடல் எடையை குறைக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் எனில் பனீர் டிக்கா, துருவிய பனீர் என எந்த வடிவிலும் பனீரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எடை அதிகரிப்பை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நாள் முழுவதும் பனீரை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொள்ளலாம். ஆனால் அளவாக உட்கொள்ளும் போது மட்டுமே பனீர் நமக்கு நன்மைகளை ஏற்படுத்தும்.
அவ்வளவு நல்லது உடம்புக்கு. இட்லிக்கு சாம்பார், சட்னி என செய்து போரடித்தது போதும். வட இந்திய சுவையில் இட்லி பனீர் மசாலா ஃப்ரை செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையானவை:
இட்லி – 4,
பனீர் – ஒரு கப்,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று,
இட்லி மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன்,
கொத்த மல்லி – சிறிதளவு,
நல்லெண்ணெய் – அரை கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
இட்லியை சதுரமாக ‘கட்’ செய்து வைக்கவும். பனீரையும் அதே போல் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு முதலில் வெங்காய த்தை வதக்கி, பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக சுருள வதக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பனீரை வறுத்து எடுக்கவும். இட்லியையும் ஃப்ரை செய்யவும்.
பிறகு இரண்டையும் சேர்த்து… உப்பு, வெங்காயம் – தக்காளி கலவை, இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்து நன்றாக கிளறி, கொத்த மல்லி சேர்த்து இறக்கவும்.