சூப்பரான இஞ்சி க்ரீன் டீ செய்வது எப்படி?





சூப்பரான இஞ்சி க்ரீன் டீ செய்வது எப்படி?

0
பன்னெடுங் காலமாய், இஞ்சி இந்தியா மற்றும் சீனாவில் விளைவிக்கப்பட்டு, சமையலில் முக்கிய பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
சூப்பரான இஞ்சி க்ரீன் டீ செய்வது எப்படி?
பழைய மருத்துவ குறிப்புகளைப் பார்த்தால், இஞ்சி பச்சையாகவும் காயவைத்தும் மருத்துவ முறைகளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என அறியப்படுகிறது.

கி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு குறிப்புகளின் படி இஞ்சி வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கும், சுவாசப் பிரச்சனை களுக்கும், வயிற்றுப் போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்ற பிரச்சனை களுக்கும் தீர்வாக இருந்து வந்துள்ளது தெரிகிறது. 
சீன மூலிகை யாளர்களும் கூட இஞ்சியை இருமல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். 

தொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக, பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

தேவையானவை :

க்ரீன் டீ பேக் - 1 

சர்க்கரை (அ) சீனி – ருசிக்கு 

இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)  

செய்முறை : 
முதலில் பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு அதில் இஞ்சி கலந்து கொதிக்க விடவும். இதில் சர்க்கரை கலந்து வடிகட்டவும். கப்பில் டீ பேக் வைத்து இந்த சூடான நீர் சேர்த்து 2 நிமிடம் விட்டு குடிக்கவும்.பரிமாறவும்.

கிரீன் டீயின் நன்மைகள் என்ன?

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். 

கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.
இத்தனை நல்ல பலன்கள் இருந்தாலும் கிரீன் டீயை அளவுக்கு அதிகமாகக் குடிக்கக் கூடாது. ஒரு நாளைக்கு 3 கப்புகளுக்கு மேல் குடிக்க வேண்டாம். 

அதையும் காலையில் தொடங்கி, மாலை 4 மணிக்குள் குடித்து முடித்துவிட வேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடித்தால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)