கேப்பை வெல்ல அல்வா செய்வது எப்படி?





கேப்பை வெல்ல அல்வா செய்வது எப்படி?

0
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக்  கொள்ளலாம். 
கேப்பை வெல்ல அல்வா செய்வது
உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும். 

கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. ஆரோக்கியமான உணவு ஆகும். இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. 

மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது. கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. 

இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். 
மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.  அது மட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. 

கேப்பை அவலை குழந்தைகள் விரும்பி உண்பார்கள் கேப்பை . ஒரு ஆளுக்கு தினமும் 40 கிராம் போதும்.இன்று அல்வாவை ரவையிலிருந்து எப்படி தயார் செய்வது என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை: 

கேப்பை (கேழ்வரகு) மாவு 100 கிராம், 

வெல்லம் 200 கிராம், 

நெய் 50 கிராம், 

எண்ணெய் 50 மில்லி, 

ஏலக்காய்த் தூள் சிறிதளவு, 

வறுத்த வேர்க்கடலை ஒரு டீஸ்பூன். 

செய்முறை: 

கேப்பை மாவை நீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். வெல்லத்தை நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். கடாயை அடுப்பில் ஏற்றி வெல்லக் கரைசலை சேர்த்து கொதி வருகையில் கரைத்த கேப்பை மாவை ஊற்றவும். 
கலவை கெட்டியாகும் போது நெய், எண்ணெய் சேர்த்துக் கிளறி, பளபளவென மாவு வெந்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வரும் போது ஏலக்காய்த் தூள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து இறக்கவும். 

இதை அப்படியே பரிமாறலாம். வில்லை களாக்கியும் சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)