வெங்காயம் இல்லாத உணவை இந்திய இல்லங்களில் பார்க்கவே முடியாது. எந்த குழம்பு வகையாக இருந்தாலும் வெங்காயம் அவசியம். அதை சமைத்து சாப்பிடுவது தான் வழக்கம்.
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று, வேடிக்கையாக வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் வெங்காயத்தை அவ்வளவு சல்லிசாக எடை போட்டுவிட முடியாது.
காரணம் சின்ன வெங்காயத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான பலன்கள். இதை அறிந்து வைத்திருந்ததால் தான் நம் முன்னோர்கள் காலையில் சாப்பிடும் பழைய சோறு, கூழ் ஆகியவற்றுக்கு பச்சை மிளகாயையும், சின்ன வெங்காயத்தையும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு வந்தனர்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைய உள்ளது.
வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேக வைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
கேரட் அல்வா உடலுக்கு எவ்வளவு சத்து தெரியுமா?
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
நறுக்கிய சிறிய வெங்காயம் - 2 கப்
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
கோதுமை மாவு - 1 கப்
நறுக்கிய சிறிய வெங்காயம் - 2 கப்
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அதனை மாவு கலவையுடன் சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தயார் செய்யுங்கள்.
அப்படி என்ன தான் இருக்கிறது நிலவில்? மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து பரிமாறுங்கள்.
சூப்பரான சின்ன வெங்காய சப்பாத்தி ரெடி.