அருமையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி செய்வது எப்படி?





அருமையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி செய்வது எப்படி?

0
நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நம் உடலில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை நம் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.
அருமையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி செய்வது எப்படி?
அந்த வகையில் ஓட்ஸ் நம் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கிய மானதாகவும் இருக்கும் ஓட்ஸை பலரும் தங்கள் காலை நேர தாயத்தில் சேர்த்து கொள்கின்றனர். 
இதற்கு முக்கிய காரணம் ஓட்ஸ் சாப்பிடுவது நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கூடுதல் உடல் எடையை குறைக்க உதவுவது. 

ஓட்ஸில் ஃபைபர் சத்து நிறைந்துள்ளதால் இதனை டயட்டில் சேர்த்து கொள்ளும் ஒருவருக்கு வயிறு முழுமை அடைந்த உணர்வு மற்றும் திருப்தியாக சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. 

இதன் மூலம் தங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த கலோரி நுகர்வு குறையும். இது எடை இழப்பிற்கு கணிசமாக உதவும். 

ஓட்ஸில் உள்ள கரையத்தக்க நார்ச்சத்தான பீட்டா குளுகான், ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப் படுத்துவதோடு, பைல் அமிலங்களுடன் இணைந்து, ஹெபாடிக் கொழுப்பு அமிலம் உருவாவதை தடுக்கிறது. 
அதிக கொழுப்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள், ஒட்ஸ் உணவை அதிகளவில் எடுத்துக் கொள்வது நல்லது. ஓட்ஸ் உணவில் உள்ள பீனால் பகுதிபொருளான அவினான்திரமைட்ஸ், வீக்கத்தை தடுக்கவல்லது. 

அருமையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி?

மேலும் இது ஆன்டி ஆக்சிடெண்ட், ஆன்டி எதிரோஸ்கிளியோரடிக் பண்புகள் நிறைந்துள்ளன. ஓட்ஸை முழுவதுமாக உட்கொள்ளும் போதே, முழுப்பயன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான பொருட்கள் : 

கோதுமை மாவு - 250 கிராம்,

உப்பு - தேவைக்கு,

ஓட்ஸ் - 100 கிராம்,

கொத்த மல்லித் தழை - சிறிது,

துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்,

பெரிய வெங்காயம் - 1,

துருவிய பீட்ரூட் - 1 டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 3,

எண்ணெய் - 30 மி.லி.,

சீரகம் - 1 டீஸ்பூன்.

செய்முறை :
ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி
வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஓட்ஸை சூடான கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போட்டு கலந்து, கேரட், பீட்ரூட், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி வைக்கவும். 

உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி?

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு உருண்டை களாக பிடித்து லேசாகத் தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து மொறு மொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும். 

 சத்தான சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)