அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்து வந்தால், விரைவாக எடை குறையும். கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன.
இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
24 வயதில் இ-காமர்ஸில் கலக்கும் குமரி ஷாப்பி !
ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. செரிமானத்துக்கு உதவும்.
சரி இனி கேழ்வரகு கொண்டு சுவையான கேப்பை இனிப்பு பணியாரம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:
கேப்பை (கேழ்வரகு) மாவு ஒரு கப்,
அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு, சோடா உப்பு தலா அரை சிட்டிகை,
தேங்காய்த் துருவல் கால் கப்,
ஏலக்காய்த் தூள் சிறிதளவு,
கரைத்த வெல்ல நீர் ஒரு கப் (200 கிராம் வெல்லம் போதுமானது),
நெய் எண்ணெய் கலவை 100 கிராம்.
செய்முறை:
மாவு வகைகளுடன் உப்பு, சோடா உப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து, வெல்ல நீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும்.
பணியாரக் கல்லில் சிறிதளவு நெய் எண்ணெய் கலவையை விட்டு, முக்கால் பாகத்துக்கு கரைத்த மாவு நிரப்பி, இரு புறமும் வேக விட்டு எடுக்கவும். இப்போது சுவையான கேப்பை இனிப்பு பணியாரம் ரெடி !