கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி செய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.
இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. கொள்ளு எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம்.
இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத் தன்மையை நீக்க உதவுபவை.
சரி இனி கேரட் கொண்டு சுவையான கொள்ளு காரப் பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 50 கிராம் (8 மணி நேரம் ஊற வைக்கவும்),
பச்சரிசி - 100 கிராம்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
பெருங்காயத் தூள், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
நெய் - 2 ஸ்பூன்,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.
செய்முறை :
இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேக விடவும்.
வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் ரெடி.